உலக உணவு பாதுகாப்பு தினம் 2023: பாக்கெட் கலாச்சாரம்..நீங்க சாப்பிடும் உணவு தரமானதா? செக் பண்ணுங்க
சென்னை: உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலியான TN Food Safety Consumer App அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாம் சாப்பிடும் உணவானது தரமற்றதாக இருந்தால் நுகர்வோர் புகார்களைத் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
உலக உணவு பாதுகாப்பு தினம் இன்று சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு என்பது உணவை சமைத்தல், சேமித்தல், அதை விநியோகித்தல் ஆகியனவற்றை உள்ளடக்கியதாகும். இந்த ஆண்டின் உணவு பாதுகாப்பு நாளுக்கான கருப்பொருள், உணவின் தரம் உயிர்களைக் காக்கும் என்பதே ஆகும்.

உலகளவில், ஆண்டுதோறும் பத்தில் ஒருவர் உணவு மூலம் பரவும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பான உணவு என்பது நல்ல ஆரோக்கியத்திற்கான மிக முக்கியமான உத்தரவாதங்களில் ஒன்றாகும். பாதுகாப்பற்ற உணவுகள் பல நோய்களுக்குக் காரணமாகவும், வளர்ச்சி மற்றும் வளர்ச்சி குறைபாடு, நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள், தொற்றாத அல்லது தொற்றக்கூடிய நோய்கள் மற்றும் மனநோய் போன்ற பிற மோசமான சுகாதார நிலைமைகளுக்கு பங்களிக்கின்றன.
பெரும்பாலான மக்கள் உணவின் தரத்தை அதன் பாக்கெட்டுகளில் உள்ள சில தகவல்களின் அடிப்படையில் தான் நம்புகின்றனர். ஆதலால் உணவுப் பாதுகாப்பு தரக் குறியீடானது விவசாயிகள் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறையில் உள்ளவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும். உணவுப் பதப்படுத்துதலில் எவ்வளவு தூரம் அடிட்டிவ்ஸ் சேர்க்கலாம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் முறை, அளவு என எல்லாமும் உணவுப் பாதுகாப்பின் கீழ் வரும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையால் 2018ல் அறிமுகப்படுத்தப்பட்ட உலக உணவுப் பாதுகாப்பு தினம் உலகெங்கிலும் சில உணவால் பரவும் நோய்களைத் தடுத்து இறுதியில் அவற்றை ஒழிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இது WHO மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூட்டு முயற்சி ஆகும். உலகளவில் உணவு மூலம் பரவும் நோய்களால் ஏற்படும் சுகாதார அபாயங்களை அகற்ற பிற உறுப்பு நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மிக மோசமான தேவை கொரோனா நெருக்கடியில் நிலவுவதை போல முன்னெப்போதும் இருந்ததில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது, உணவுப்பழக்க நோய்கள் பரவுவதை அகற்றுவது, விவசாய களங்களில் ஆரோக்கியமான, சுகாதாரமான நடைமுறைகளை வளர்ப்பது, சந்தை மற்றும் உணவு பரிவர்த்தனைகளை உள்ளடக்கிய எல்லா இடங்களிலும் இது மிகவும் இன்றியமையாததாகிவிட்டது.
போதுமான அளவு பாதுகாப்பான உணவைப் பெறுவது வாழ்க்கையை நிலைநிறுத்துவதற்கும் நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியமாகும். உற்பத்தி முதல் அறுவடை, பதப்படுத்துதல், சேமிப்பு, விநியோகம், தயாரித்தல் மற்றும் நுகர்வு வரை - உணவுச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் உணவு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் உணவுப் பாதுகாப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களைத் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் புகார்கள் பெறப்பட்டு 72 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதை மேம்படுத்தும் விதமாக தற்போது foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலியான TN Food Safety Consumer App அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த இணையதளம், எளிய முறையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளிலும், மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் ஸ்க்ரீன் ரீடர் வசதிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவு பாதுகாப்புத் துறை மூலம் நுகர்வோர் குறைதீர்ப்பு செயலியில், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யின் மறு பயன்பாடு, உணவு செறிவூட்டல் ஆகியவை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த குறும்படங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் உணவு பாதுகாப்புதுறையால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு செயலி ஆகிய சேவைகளை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications