உலக முருக பக்தர்கள் மாநாடு.. பழனியில் கூட தயாராகும் முருக பக்தர்கள்.. முதல்வர் தலைமையில் முடிவு
சென்னை: முருகனுக்கு உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஒன்றுகூடி பல நிகழ்வுகளை மேற்கொள்ளவும், முருகனின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் உலக முருக பக்தர்கள் மாநாட்டை பழனியில் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அறநிலையத் துறை ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், அறநிலையத் துறை பதிப்பகப் பிரிவின் மூலம், 2-வது கட்டமாக, கோயில்களின் தல வரலாறு, தலபுராணங்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட பக்தி இலக்கியங்கள் என பழமையான நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்ட 108 அரிய பக்தி நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் ஏற்கெனவே உள்ள 108 புத்தக விற்பனை மையங்களுடன், இந்தாண்டு புதிதாக 100 கோயில்களில் புத்தக விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. நிதி வசதியற்ற 500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முருகனுக்கு உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஒன்றுகூடி பல நிகழ்வுகளை மேற்கொள்ளவும், முருகனின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் உலக முருக பக்தர்கள் மாநாட்டை பழனியில் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய வேளாக்குறிச்சி சத்யஞான மகாதேவ பரமாச்சாரிய சுவாமிகள் நிதிவசதி இல்லாததிருக்கோயில்கள் திருப்பணிக்கென தனியாக நிதியம் ஏற்படுத்தி முதல்கட்டமாக 500 கோயில்களுக்கு ரூ.50 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், அர்ச்சகர், பணியாளர்களுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக 100 குடியிருப்புகள் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் கூட்டத்தில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அனைத்தும் நல்ல திட்டங்கள் என்பதால் அனைத்து ஆதீனங்களும் ஒப்புதல் அளித்தோம் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ஆன்மீக பேச்சாளர்சுகி.சிவம், மு.பெ.சத்தியவேல் முருகனார், ந.ராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமார், மல்லிகார்ஜுன சந்தான கிருஷ்ணன், ஸ்ரீமதி சிவசங்கர், தேச மங்கையர்க்கரசி ஆகியோரும் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், தூத்துக்குடி செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், குமர குருபர சுவாமிகள், கவுமார மடம், அருள் நாகலிங்கம், மெய்யப்பன், வெற்றிவேல், அருள்நந்தி சிவம் ஆகியோர் பங்கேற்றனர்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications