அட்ராசக்க.. உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை ஓசூர் நகரில் அமைகிறது.. 60 ஆயிரம் பேருக்கு வேலை
சென்னை: உலகின் மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைய உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

ஒசூரில் ஐபோன் தயாரிப்பு
அந்த வகையில் உலகின் மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை தமிழகத்தில் உள்ள ஓசூர் பகுதியில் அமைய இருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்கனவே ஐ-போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

60 ஆயிரம் பேருக்கு வேலை
இந்த சூழலில், உலகிலேயே மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை சீனாவில் மூடப்படும் நிலையில் இந்தியாவில் புதிய ஆலை தொடங்கப்படுகிறது. ஓசூரில் அமையவுள்ள புதிய தொழிற்சாலையில் அடுத்த 2 மாதங்களில் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். 60,000 பேர் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் பிரம்மாண்டமான தொழிற்சாலையை டாடா குழுமம் அமைக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேலும் 53 ஆயிரம் பேரை பணிக்கு அமர்த்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்
சீனாவில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் அங்கு ஐபோன் உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலையை பல்வேறு நாடுகளில் அமைக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வந்தது. இந்த நிலையில் ஒசூரில் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை அமைய உள்ளதாக மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் அறிவித்திருந்தார்.

வேலைவாய்ப்பு
அப்போது, புதிய ஐபோன் தொழிற்சாலையில் 60,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் அவர்களில் 6,000 பணியாளா்கள், ராஞ்சி மற்றும் ஹஜாரிபாக் பகுதிகளைச் சோ்ந்த பழங்குடியினர் என்றும் கூறினார். ஐபோனுக்கு தேவையான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் பணியினை, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே ஐபோன் உதிரிபாகங்களை விஸ்ட்ரான், ஃபாக்ஸ்கான், பெகட்ரான் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஒசூர் ஆலை மூலம் தமிழக இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications