World's Costly Rice: உலகிலேயே விலை அதிகம் உள்ள அரிசி எது தெரியுமா? ஒரு கிலோ ரூ.12,577
டெல்லி: உலகிலேயே மிகவும் விலை மதிப்புள்ள அரிசி எங்கிருக்கிறது தெரியுமா? அது ஒரு கிலோ 12,577 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த அரிசி ஏன் இத்தனை விலைக்கு விற்கப்படுகிறது? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

உலகளவில் பல்வேறு அரிசி வகைகள் உள்ளன. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் நெற்களஞ்சியம் தஞ்சாவூராகும். டெல்டா மாவட்டத்தில் ஏராளமான அரிசி வகைகள் கிடைக்கும்.
பச்சை அரிசி, பொன்னி, பொன்னி புழுங்கல் அரிசி, பாசுமதி அரிசி, சீரகசம்பா, கிச்சலி சம்பா, தூயமல்லி, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார் அரிசி, மூங்கில் அரிசி, கைகுத்தல் அரிசி, காட்டுயாணம், கருடன் சம்பா, குடவாழை உள்ளிட்ட ஏராளமான அரிசி வகைகள் உள்ளன.
பாரம்பரிய நெல் விதைகள் ஏராளமானவை உள்ளன. மேற்கண்டவை மொத்தம் இருக்கும் அரிசி வகைகளில் மிகவும் குறைவான எண்ணிக்கையாகும். அது போல் ஊருக்கு ஊர் ஒவ்வொரு அரிசி ரகம் இருக்கிறது.
ஆந்திராவில் ஒன்று, கேரளாவில் குண்டு அரிசி, சிவப்பு அரிசி, மட்ட அரிசி, கர்நாடகாவில் ஒரு வகையான அரிசி என உண்டு. அந்த வகையில் ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு வகை அரிசி, உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த அரிசியாக இருக்கிறது. இந்த அரிசி வெறும் அதிகவிலைக்கு மட்டுமின்றி அதன் பல்வேறு சிறப்பு அம்சங்களுக்காகவும் பரவலாக கவனிக்கப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் உள்ள டேயோ எனும் அரிசி நிறுவனம் கின்மேமை எனும் அரிசி வகையை தயாரிக்கிறது. இந்த அரிசிதான், உலகிலேயே மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு அந்த நிறுவனம் காப்புரிமையும் பெற்றுள்ளது.
மிக முக்கியமாக இந்த அரிசி அதன் தரத்திற்காக மிகவும் பிரபலமடைந்துள்ளது. அது போல் இந்த கின்மேமை அரிசியில் அதிகளவு ஊட்டச்சத்தும் இருப்பதால் மிகவும் கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்த கின்மேமை அரிசி சாதாரண அரிசியை விட 1.8 மடங்கு அதிக நார்ச்சத்து கொண்டது. 7 மடங்கு வைட்டமின் பி1 சத்து இருக்கிறது. இதனால்தான் இந்த அரிசியை உடல் நலத்தில் அக்கறை கொண்டவர்கள் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
மேலும் இந்த அரிசியில் எந்த கலப்படமும் இல்லை என்கிறார்கள். இந்த அரிசி ஒரு கிலோ ரூ 12,577 ஆக உள்ளது. இந்த அரிசி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. கின்மேமை அரிசி என்பது ஒரே ஒரு வகை அல்ல. இது ஜப்பான் முழுவதும் பயிடப்படும் குன்மா, கிஃபூ, குமாமோட்டோ, நாகானோ, நிகாட்டா ஆகியவைகளின் கலவை என்கிறார்கள்.
இந்த அரிசியை கழுவாமலேயே பயன்படுத்தும் அளவுக்கு சுத்தமான ஒரு அரிசியாகும். அரிசியை கழுவுவதால் தண்ணீர் வீணாகிறது. அதை தடுக்கவே ஏற்கெனவே கழுவப்பட்டு இந்த அரிசி விற்பனை செய்யப்படுகிறது. எனவே வாங்கி வந்ததும் அப்படியே தூக்கி குக்கரிலோ அல்லது பாத்திரத்திலோ போட்டு சமைக்கலாம். இதில் அமினோ அமிலங்கள், ஊட்டச்சத்துகள், வைட்டமின் பி ஆகியவை அதிகமாக இருக்கின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications