நிலைமை மோசம்.. 3ம் உலகப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது.. எச்சரிக்கை விடுத்த ஜாம்பவான்.. கவனம்!
சென்னை: மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் மூன்றாம் உலகப் போரைப் பற்றி ஒரு கடுமையான எச்சரிக்கையை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மோதல்கள் உலகளாவிய போராக விரிவடையும் என்று டிமோன் எச்சரித்து உள்ளார். மூன்றாம் உலகப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று எச்சரித்து உள்ளார். இந்த மோதல்களைத் தூண்டுவதில் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த நாடுகள்தான் போருக்கு காரணமாக அமையும்.

உலகளாவிய மோதலின் அபாயம் அதிகரிக்கும் போது, போர் கண்டிப்பாக வரும். அந்த வகையில் தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் மூன்றாம் உலகப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று எச்சரித்து உள்ளார்.
சமீபத்தில் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக.. கடுமையான பதற்றம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக எக்ஸ் பக்கத்தில் #WorldWar3 என்ற டேக் டிரெண்டாகி வருகிறது. ஈரான் கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. முழுக்க முழுக்க திட்டமிட்டு, முறையாக சர்ஜிக்கல் ஸ்டைல் ஸ்டைலில் தாக்குதலை நிகழ்த்தி உள்ளது இஸ்ரேல்.
ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதல் தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேல் வெளியிட்ட ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் ராணுவ தளங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல் மேலும் அதிகரிப்பதை தடுக்க அணு மற்றும் எண்ணெய் மையங்களை தவிர்த்து இஸ்ரேல் ஜாக்கிரதையாக தாக்குதல் நடதஹி உள்ளது.
இந்த தாக்குதல் தற்போது நிறைவு பெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தங்களின் தாக்குதல் வெற்றிபெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. ஈரானிடம் இருந்தும்.. ஈரானின் துணை அமைப்புகளிடம் இருந்தும் பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது என்பதால் இஸ்ரேல் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது.
உலகப்போர்: ரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக.. கடுமையான பதற்றம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக எக்ஸ் பக்கத்தில் #WorldWar3 என்ற டேக் டிரெண்டாகி வருகிறது. ஏற்கனவே சீனா, ரஷ்யா, இஸ்ரேல், ஈரான் உள்ளிட்ட பெரிய நாடுகள் அடுத்தடுத்து போருக்கு தயாராகி வருகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்த நாடுகளின் சமீபத்திய பேச்சுக்கள், நடவடிக்கைகள் இது தொடர்பான விவாதத்தை, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஒரு பக்கம் அமெரிக்காவுடனான நீண்ட மோதலுக்கு ரஷ்யா தயாராக வேண்டும் என்று ரஷ்யா நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளாராம். இரண்டு நாட்டு உறவுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து வாஷிங்டனுக்கு எச்சரிக்கையை அனுப்பி உள்ளோம் என்று துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்து உள்ளாராம்.
உக்ரைன் - ரஷ்யா போர், ஈரான் - லெபனான் - இஸ்ரேல் போர் ஆகிய போர்கள் காரணமாக அமெரிக்கா - ரஷ்யா ஆகிய இரண்டு நாட்டு மோதல் உச்சம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்டு பிரிவினை இதுவரை இல்லாத மிகவும் ஆபத்தான கட்டத்தை அடைந்து உள்ளது என்று ரஷ்ய அதிகாரிகளிடம் ரஷ்யா நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்து உள்ளாராம். முக்கியமாக பனிப்போரை விட மோசமான சூழலை இரண்டு நாடுகளும் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
சீனா திட்டம்: இது போக னா தைவான் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. தைவானில் இருந்து ஒரு மூச்சு கூட வெளியே போகாத அளவிற்கு தைவானை சீனா தற்போது சுற்றி வளைத்து உள்ளது. தைவான் மீது சீனா எப்போது வேண்டுமானாலும் போர் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
சீன அதிபர் ஜி ஜின்பிங் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா நாட்டு படைவீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும்.தைவானைச் சுற்றி சீனா பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை நடத்தி வரும் நிலையில்தான்.. போர் நடத்த தயாராக இருங்கள். போர் வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்ளின் பலத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் போர் புரியும் திறனை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications