”ரயில் வந்தால் விமானம் போகாது, விமானம் வந்தால் ரயில் போகாது” உலகின் வினோத ஏர்போர்ட்! எங்கே தெரியுமா?
சென்னை: பயணிகளின் வசதிக்காக ஏர்போர்ட்டும் ரயில் நிலையமும் அருகருகே இருப்பதை பார்த்து இருக்கிறோம். ஆனால், சாலையை கடப்பது போல விமானமும் ரயில் தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நியூசிலாந்தில் விமான நிலையத்திற்குள்ளேயே ரயில்வே தண்டவாளம் செல்கிறது. இதனால் ரயில் செல்லும் போது விமானம் காத்து நிற்குமாம்.. விமானம் செல்லும் போது ரயில் காத்து நின்று தான் செல்லுமாம்.. இது வினோத சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பஸ், கார்களில் போகும் சாலைகளின் குறுக்கே ரயில் தண்டவாளங்கள் செல்வதை பார்த்து இருப்போம். ரயில்கள் செல்லும் போது அது கடந்து செல்வதற்காக சாலையின் இரு பக்கங்களிலும் வாகனங்கள் காத்து இருக்கும். சிறு வயதில் இந்த காட்சிகளை எல்லாம் வியப்போடு பார்த்து இருப்போம்.

விமான ஓடுபாதைக்கு நடுவே ரயில் பாதை
இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளில் கூட இந்தக் காட்சிகளை எல்லாம் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். ஆனால், கடந்த சில நாட்களாக இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. விமான ஓடுதளத்திற்கு இடையே ரயில் தண்டவாளம் இருக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்று இருந்தன. எதாவது ஏஐ படமாக இருக்கும் என பலரும் நினைத்த நிலையில், இது உண்மையானது என்று தெரியவந்துள்ளது.
நியூசிலாந்து நாட்டில் தான் இப்படி ஒரு இடம் இருக்கிறதாம். விமான ஓடுபாதைக்கு நடுவே தன்டவாளமும் அமைந்துள்ளதாம். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம். நியூசிலாந்தின் கிஸ்போர்ன் விமான நிலையம் சுமார் 160 ஹெக்டேர் பரப்பளவும் கொண்டது. இந்த விமான நிலையத்தின் ஓடுபாதையில் சரியாக பாதி தூரத்தில் ரயில் தண்டவாளம் ஒன்றும் செல்கிறது.
வழிவிடுவது ரயிலா இல்லை விமானமா?
விமானமும் ரயிலும் ஒரே இடத்தை பயன்படுத்துகிறது என்றால் விமானத்திற்கு, ரயில் வழிவிடுமா இல்லை, ரயிலுக்கு விமானம் வழிவிடுமா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். உண்மையில் இந்த கிஸ்போர்ன் விமான ஓடுதளத்தை பொறுத்தவரை நேரம்தான் இதை நிர்ணயிக்கிறது. ரயில் விமான ஓடுபாதையை கடக்க வேண்டியிருந்தால் முதலில் விமான கட்டுப்பாட்டு அலுவலரை தொடர்பு கொண்டு அனுமதி கேக்க வேண்டும்.
அனுமதி கிடைத்ததும் ஓடுதளத்தை கிராஸ் செய்து செல்லலாம். சில நேரம் ரயில் காத்திருக்க வேண்டும். விமானம் டேக் ஆப், அல்லது லேண்டிங்க் ஆக வந்தால் ரயில் அந்த நேரத்தில் நிறுத்தப்படும். இரண்டு மிக முக்கியமான பொது போக்குவரத்து அமைப்புகளும் ஒரே இடத்தை பயன்படுத்துவதால், ரயில் மற்றும் விமான போக்குவரத்து அதிகாரிகள் எப்போதுமே தொடர்பில் இருப்பார்களாம்.
பார்வையிட குவியும் சுற்றுலா பயணிகள்
விமான நிலையத்திற்கு உள்ளேயே ரயில்வே கிராசிங் இருப்பதால் இதை பார்ப்பதற்காகவே வெளிநாடுகளில் இருந்து கூட சுற்றுலாப்பயணிகள் குவிவதை பார்க்க முடியும். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் பயணிகளின் விசிட் லிஸ்ட்டில் கண்டிப்பாக இந்த விமான நிலையமும் இடம் பெற்று இருக்கும் அளவுக்கு இந்த இடம் ரொம்பவே பிரபலமானது என்கிறார்கள் உள்ளூர் அதிகாரிகள்.
வைரல் ஆக்கும் நெட்டிசன்ஸ்
நியூசிலாந்தின் முரிவாய் மற்றும் கிஸ்பேன் இடையே இயங்கும் இந்த ரயில் நீராவியில் இயங்க கூடியதாம். ஆண்டுக்கு வெறும் 15 முறை மட்டுமே ரன்வேயை கடந்து செல்கிறது. குறிப்பாக கோடைக்காலங்களில் இந்த ரயில் அதிகமாக இயக்கப்படுகிறது. விமான ஓடுதளத்தில் ரயில் இயங்குவது கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம் என்பதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் மொபைலில் கிளிக் செய்து அவ்வப்போது வைரல் ஆக்கிவிடுததையும் பார்க்க முடிகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications