இசை கலைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலித்த சஞ்சாரம்.. சாகித்ய அகாடமி பெறுகிறார் எஸ்.ரா!
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்பான 'சஞ்சாரம்’ என்னும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்பான 'சஞ்சாரம்' என்னும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசால் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சஞ்சாரம் என்னும் நாவலை எழுதிய எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன், சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன.

2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட சஞ்சாரம் நாவலில், நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களின் வாழ்க்கை போராட்டம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் 1984 - ம் ஆண்டில் இருந்து சிறுகதை, கதைகள், புதினம், நாவல் என பல்வேறு படைப்புக்களை கொடுத்து வருகிறார். பயணம் குறித்த பல்வேறு நாவல்களை இவர் எழுதியுள்ளார்.
மேலும், பாபா, சண்டக்கோழி, தாம் தூம், பீமா, அவன் இவன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications