சென்னையில் நள்ளிரவில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற சொகுசு கார் மோதி இளைஞர் படுகாயம்..போதையில் விபத்து?
சென்னை: சனிக்கிழமை நள்ளிரவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
2016ம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் பிரபலம் ஆனார்.
அதன்பின்னர் தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார். தற்போது இவன் தான் உத்தமன், ராஜா பீமா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சொகுசு கார் மோதியது
இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் நண்பர்களுடன் சனிக்கிழமை நள்ளிரவில் சொகுசுகாரில் சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் வந்து கொண்டிருந்தார். நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையோரத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் உணவை டெலிவரி செய்யும் ஊழியரான பரத் என்பவர் மீது மோதியதுடன் அங்கிருந்த கடை ஒன்றின் மீதும் மோதியது.

போலீஸ் வழக்கு
இதில் ஊழியர் பரத் படுகாயம் அடைந்தார். அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.

யாஷிகா சென்றுவிட்டார்
இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்தும் காரில் இருந்ததாகவும், விபத்து நிகழ்ந்தவுடன் அங்கிருந்து அவர் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காரை ஓட்டியது யார்
மேலும் காரில் இருந்தவர்கள் மது அருந்தியிருந்ததாகவும் சொல்கிறார்கள்.காரை ஓட்டிவந்தது யாஷிகா ஆனந்த்தா அல்லது வேறு யார் என்பது குறித்து உறுதியாக தகவல்கள் வெளியாகவில்லை. இதேபோல் யாஷிகா மதுஅருந்தி இருந்தாரா என்பது குறித்த தகவலும் இதுவரை தெரியவரவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications