நோயாளியை தொட்டுப் பார்க்காமலே.. டாக்டர்களை மருந்து, மாத்திரை கொடுக்க வைத்த 2020
சென்னை: கொரோனா பரவல் காரணமாக, 2020மாவது ஆண்டு முழுவதும் மக்களின் கவனம் சுகாதாரத் துறை மீதுதான் அதிகமாக இருந்தது.
கொரோனா சிகிச்சை, கொரோனா தடுப்பூசி போன்றவற்றுக்காக மட்டுமல்ல, காய்ச்சல், தலைவலிக்கு கூட மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வீடியோ மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட ஒரே ஆண்டு 2020 மட்டுமாகத்தான் இருக்கும்.

கொரோனா பரவிவிடுமோ என்ற அச்சத்தால் பலர் மருத்துவமனைகளுக்கு வருவதையும் தவிர்த்தனர். அறுவை சிகிச்சைகளைக் கூட தள்ளிப் போட்டனர்.
நோயாளிகளுக்கும் மருத்துவருக்கும் இடையிலான இந்த இடைவெளியைக் குறைக்க, தொலைத் தொடர்புத் துறை மேம்படுத்தப்பட்டது. டிஜிட்டல் சுகாதார சேவைகள் முன்பே இருந்தன, ஆனால் இது 2020 ஆம் ஆண்டில்தான் வளர்ச்சியடைந்தது.
டாக்டர் மோனிகா கோயல் இதுபற்றி கூறுகையில், ஒரு குழுவாக நாங்கள் ஆன்லைனில் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஹைப்போ தைராய்டிசம் மற்றும் வயது மூப்பு காரணமாக பிரச்சினைகளை எதிர்கொண்டவர்களுக்கு தீர்வுகளை கொடுக்க முடிந்தது என்றார்.
கொரோனா காலத்தில், பெரிய வாழ்க்கை முறை மாற்றங்கள் ஏற்பட்டது. இது தனிநபர்களின் மன ஆரோக்கியத்தை பாதித்தன. மனநல பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்க உயர்வுக்கு வழிவகுத்தது என்று சொல்லும் டாக்டர் தர்ஷி, "கவலை, மன சோர்வு கோளாறு, பீதி தாக்குதல், மரண பயம், தொற்றுநோய் பற்றிய பயம், விரக்தி, எரிச்சல், சோகமான மனநிலை, தூக்கமின்மை மற்றும் தினசரி செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பாதிப்பை அதிகரித்தன. இதற்கு ஆன்லைனில் வழிகாட்டினோம்" என்கிறார்.

ஆன்லைன் ஆலோசனை உதவியாக இருந்ததா?
"ஆன்லைன் ஆலோசனை காரணமாக, கவலை மற்றும் மருத்துவமனைக்கு வருவதற்கான பயம் ஆகியவை குறைத்தது. கொரோனா நோயாளிகளுக்கும், அவசர தேவை உள்ளவர்களுக்கும் மருத்துவமனையில் படுக்கைகள் கிடைப்பதற்கும் ஆன்லைன்ல ஆலோசனை உதவியது." என்று டாக்டர் கோயல் தெரிவிக்கிறார்.
நோயாளிக்கு கடுமையான நுரையீரல் பிரச்சினை அல்லது இதயம் தொடர்பான நோய் இருந்தால், அந்த நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டது என்றும் டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆக மொத்தம், நோயாளியை தொட்டுப் பார்க்காமலே மாத்திரை எழுதி கொடுக்கும் நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டது, 2020ம் ஆண்டில் நடைபெற்ற மிகப்பெரிய மாற்றமாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications