தள்ளி போகும் செவ்வாய் பயணம்.. ஸ்டார்ஷிப் தோல்வி தந்த அனுபவங்கள்! ப்ளாஷ்பேக் 2023
சென்னை: மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டு செல்ல இருக்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'ஸ்டார்ஷிப்', ராக்கெட் இந்த ஆண்டு இரண்டு பெரிய தோல்விகளை சந்தித்திருக்கிறது. இருப்பினும் தோல்விகள் நிறைய அனுபவங்களை கொடுத்திருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் கூறியுள்ளது. அந்த வகையில் 2023ம் ஆண்டு விண்வெளி துறைக்கு மிக முக்கியமானதாகும்.
மனிதனுக்கும் நிலவுக்குமான தொடர்பு என்பது மனித இனம் உருவான காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. அதாவது மனித இனத்தின் வயது தோராயமாக 3 லட்சம் வருடங்களாகும். அதேபோல மனிதனுக்கும் நிலவுக்கும் இடையேயான தொடர்பின் வயதும் 3 லட்சம் வருடங்களாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஏனெனில், ஆதி மனிதன் நிலவை புரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அவனுடைய வாழ்விட எச்சங்களிலிருந்து நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

பூமியிலிருந்து நிலவை ஆய்வு செய்த மனிதர்கள், ஒரு கட்டத்தில் நிலவிலேயே இறங்கி ஆய்வு செய்ய தொடங்கினர். இதனை சாத்தியப்படுத்தியது நாசாவின் அப்பல்லோ திட்டம்தான். நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் தொடங்கி தற்போது வரை 12 பேர் நிலவுக்கு சென்று திரும்பியிருக்கிறார்கள். இந்த பயணத்தை 1972ல் அமெரிக்கா முடித்துக்கொண்டது. ஆனால் இந்த பயணங்களில் மனிதர்கள் குறைந்த நேரம்தான் நிலவில் இருந்தனர். எனவே சில முக்கியமான ஆய்வுகளை அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை. எனவே நீண்ட நேரம் நிலவில் இருந்து ஆய்வு செய்யும் வகையில் புதிய திட்டத்தை நாசா உருவாக்கி வருகிறது.
எனவே விரிவான ஆய்வு திட்டத்தின் பெயர்தான் 'ஆர்டெமிஸ்'. இந்த 'ஆர்டெமிஸ்' திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட இருக்கிறது. முதல் இரண்டு கட்டங்களில் தாவர விதைகள், பாசிகள், ஈஸ்டுகள், பூஞ்சை ஆகியவற்றை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும். மூன்றாவது கட்டத்தில்தான் மனிதர்கள் நிலவுக்கு செல்வார்கள். இவர்களை பத்திரமாக கொண்டு செல்ல, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 'ஸ்டார்ஷிப்' எனும் பிரமாண்ட ராக்கெட்டை உருவாக்கியிருக்கிறது.
நிலவுக்கு மட்டுமல்ல, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்து சென்று ஸ்டார்ஷிப் பத்திரமாக திரும்பும். அந்த அளவுக்கு அட்டகாசமாக இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. 121 மீட்ட உயரம் கொண்ட இந்த ராக்கெட் இரண்டு பகுதிகளை கொண்டிருக்கும். தலைபகுதியில் விண்கலம் இருக்கும். அதற்கு அடியில், சூப்பர் ஹெவி பூஸ்டர்கள் இருக்கும். இந்த ஹெவி பூஸ்டர், 33 ராப்டர் என்ஜின்களை கொண்டிருக்கிறது. ஆனால் சோகம் என்னவெனில், ஸ்டார்ஷிப்பின் கடைசி இரண்டு சோதனைகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சோதனையில், பூமியிலிருந்து கிளம்பிய இந்த ராக்கெட், கொஞ்ச நேரத்திலேயே வெடித்து சிதறியது. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதமும் மற்றொரு சோதனை முயற்சி நடத்தப்பட்டது. இதிலும், பூஸ்டர் பாகம் தனியாக கழன்று பத்திரமாக தரையிறங்காமல், கட்டுப்பாட்டை இழந்து வெடித்து சிதறியிருக்கிறது. பல்லாயிரம் கோடி மதிப்பிலான இரண்டு சோதனைகளும் தோல்வியில் முடிந்திருந்தாலும், இதிலிருந்து பல்வேறு பாடங்களை கற்றுக்கொண்டதாக ஸ்பேஸ் எக்ஸ் கூறியிருக்கிறது.
அந்த வகையில் 2023 ஆண்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு பாடத்தையும், அனுபவத்தையும் கற்றுக்கொடுத்திருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல. இன்று இல்லை என்றாலும் கூடிய விரைவில் ஸ்டார்ஷிப் சிறப்பாக தயாராகும். அதன் மூலம் மனிதர்கள் இந்த விண்வெளியை நிச்சயம் ஆளுவார்கள் என ஸ்பேஸ் எக்ஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications