சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தயாளு யாராவது வந்து என்னை எங்கே என கேட்டால்"... 2020ன் மறக்க முடியாத போட்டோ!

Google Oneindia Tamil News

சென்னை: வழக்கமாக ஒரு அரசியல் தலைவருக்கு நினைவுநாள் என்றால், அவரது பழைய நினைவுகளுடன் கூடிய போட்டோக்களை அன்றைய நாளில் பதிவிட்டு புகழஞ்சலி செலுத்துவர்.. ஆனால், கலைஞர் கருணாநிதியின் நினைவுநாளன்று, அவரது பழைய போட்டோ ஒன்று இணையத்தில் வைரலானது இந்த வருடம் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றாக இணைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதியின் நினைவு தினம் தமிழகமெங்கும் அனுசரிக்கப்பட்டது.. அவருக்கு ஏராளமான தேசிய, மாநில தலைவர்கள் புகழஞ்சலி தெரிவித்திருந்தனர்.

Year Ender: Karunanidhi and Dhayalu Ammals Photo viral on socials in 2020 Unforgettable

அதேபோல, அரசியல், சினிமா, பொதுவாழ்க்கை குறித்த தகவல்களும், போட்டோக்களும் இணையத்தில் பதிவு செய்து தொண்டர்கள் நினைவுகூர்ந்தனர். தன்மான தலைவரின் புகழ், அருமை, குறித்த வரிகளை பதிவிட்டு தொண்டர்கள் புளங்காகிதம் அடைந்தனர்.

அந்த வகையில் ஒரு போட்டோவை பதிவிடவும், அது படுவைரலாகிவிட்டது.. ஒரு தலைவர் இறந்து 2 வருடம் கழித்து அவரது போட்டோ வைரலாவது ஆச்சரியமான ஒன்றாகும்.. அந்த படம் கருணாநிதி - தயாளு அம்மாள் இருவரும் உள்ள போட்டோ.. தயாளு அம்மாள் தன் வீட்டின் கதவோரத்தில் நின்று கொண்டிருக்கிறார்..

பிரபாகரன் பிள்ளை Vs கருணாநிதி மகன் இடையே யுத்தம்.. ஸ்டாலினை எதிர்த்துதான் போட்டி- சீமான் திட்டவட்டம்பிரபாகரன் பிள்ளை Vs கருணாநிதி மகன் இடையே யுத்தம்.. ஸ்டாலினை எதிர்த்துதான் போட்டி- சீமான் திட்டவட்டம்

கருணாநிதி வெளியில் எங்கோ கிளம்பி செல்கிறார் போலும்.. அவரை வழி அனுப்ப தயாளு அம்மாள் அங்கே நின்றிருக்கிறார் என தெரிகிறது. இதை ஒரு தொண்டர் பதிவிட்டு "தயாளு செல்கிறேன், அன்பு உடன்பிறப்புக்கள் யாரேனும் வந்து, என்னை எங்கே? என்று கேட்டால். அண்ணாவை காண சென்றுவிட்டேன்.. என்று கூறு. #கருணாநிதி" என்று உருக்கத்துடன் தெரிவித்திருந்தார்.

இந்த படம் கருணாநிதி இறந்த தினத்தன்றும் வைரலானது.. அவரது நினைவு நாளன்றும் வைரலானது.. இதற்கு காரணம், அதில் குறிப்பிட்டிருந்த வரிகளும், அந்த போட்டோவும் பல்லாயிரக்கணக்கான அர்த்தங்களையும் எண்ணற்ற துயரங்களையும் கொண்டு வந்து கொட்டி விட்டு சென்றதுதான்!

English summary
Year Ender: Karunanidhi and Dhayalu Ammals Photo viral on socials in 2020 Unforgettable
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X