ஏழைகளின் ஊட்டி.. கோடை விடுமுறையில் குறைந்த செலவில் ஜில் செய்யனுமா? இந்த ஸ்பாட்டை மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: கோடைக்காலம் தொடங்கிவிட்டது, குழந்தைகளுக்கும் விடுமுறை வரப்போகிறது என்று சுற்றுலா செல்ல பலரும் திட்டமிட்டு வருவார்கள். செலவும் குறைவாக இருக்க வேண்டும்.. ஊட்டி போன்ற பயண அனுபவமும் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சுற்றுலா ஸ்பாட்டாக இருப்பது ஏற்காடுதான்.. ஏழைகளின் ஊட்டி என்று வர்ணிக்கப்படும் ஏற்காட்டில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம்.
கோடை காலம் தொடங்கிவிட்டது. பள்ளிகளுக்கு இன்னும் ஒரு சில நாட்களில் இறுதியாண்டு தேர்வும் நடைபெற்று முடிந்துவிடும். கோடைக்காலம் என்றாலே சொந்த ஊர்களுக்கு சென்று தாத்தா, பாட்டியுடன் பொழுதை கழிப்பது, சுற்றுலா செல்வது என குடும்பத்துடன் பொழுதை கழிக்க பெற்றோர்கள் திட்டமிடுவார்கள்.

செலவும் குறைவாக இருக்கும்
சென்னை, திருச்சி, நகரவாழ்கையில் இருக்கும் மக்கள் கோடை விடுமுறைக்கு மனதிற்கு இதமாக கொஞ்சம் கூலான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று விருப்பப்படுவார்கள். ஜில் இடம் என்று நினைத்தாலே மனதிற்கு முதலில் வருவது ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்கள்தான். ஆனால், இந்த இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். செலவும் அதிகம் பிடிக்கும் என்று நினைக்க தோன்றும்.
செலவும் குறைவாக இருக்க வேண்டும்.. ஊட்டி போன்ற பயண அனுபவமும் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சுற்றுலா ஸ்பாட்டாக இருப்பது என்னவென்றால் ஏற்காடுதான்.. ஏழைகளின் ஊட்டி என்று வர்ணிக்கப்படும் ஏற்காட்டில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்கலாம்.
மான்பூங்கா, தாவரவியல் பூங்கா
சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையில் ஏற்காடு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 4,969 அடி உயரத்தில் அமைந்துள்ள ஏற்காடு அமைந்துள்ளது. இங்குள்ள ரம்மியமான இயற்கை அழகு இதமான தட்பவெட்பம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும். இங்குள்ள மஞ்சகுட்டை பகுதியில் இருந்து சூரிய உதயத்தை காணவே இங்கு பெரும் கூட்டம் அலைமோதும்.
இயற்கையான சூழலில் சூரிய உதயம் கண்ணுக்கு விருந்தளிக்கும். மலைகளுக்கு இடையே தானாக உருவான ஏரி ஒன்றும் இங்கே உள்ளது. அருகிலேயே பூங்காவும் உள்ளது. ஏரிக்கு நடுவே தீவு போல அமைந்துள்ள மான்பூங்காவும் உள்ளது. 18.4 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, தாவர வகைகள் உள்ளன.
சுற்றுலா பயணிகள் கூட்டம்
இங்கு ரோஜா தோட்டம் ஒன்றும் உள்ளது. அரிய வகை மரங்களும் பராமரிக்கப்படுகின்றன. அதேபோல, ஏற்காட்டில் இருந்து தொலைநோக்கி மூலமாக சேலம் நகரின் மொத்த அழகையும் பார்க்கும் வசதியும் உள்ளது. இரவு நேரத்தில் இதனை பார்க்கும் அவ்வளவு அழகாக இருக்கும். வாகனங்களின் ஒளிக்கீற்றுகளும் வீடுகளின் விளக்குளும் என மின்னொளியில் சேலம் நகரத்தின் மொத்த அழகையும் காண முடியும்.
அதிக செலவு இன்றி ஏற்காட்டில் இயற்கை அழகை ரசிக்க முடியும் என்பதால் இங்கும் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா ஏரிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இதில் கோடைவிழாவின் போது மலர்கண்காட்சி நடைபெறும். இதனுள்ளே உள்ள ஜப்பானிய பூங்கா கண்டிப்பாக கானவேண்டிய ஒன்றாகும்.
நுழைவு கட்டணம்:
பெரியவருக்கு ரூ.15, குழந்தைகளுக்கு ரூ.10.
எப்படி போவது?
* வெளி மாநிலங்களில் இருந்தும் தொலை தூரங்களில் இருந்தும் விமானம் மூலமாக வருவதாக இருந்தால் பெங்களூர் 250 கிமீ, கோயம்புத்தூர் - 190 கி.மீ வந்து அங்கிருந்து கார் மூலமாக வரலாம்.
* ரயில்களில் வருவதாக இருந்தால் சேலம் வரை வந்து அங்கிருந்து கார்களில் வரலாம். சேலம் ரயில் நிலையத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
* சேலத்திலிருந்து ஏற்காட்டுக்கு உடனக்குடன் பேருந்து வசதி உள்ளது. சேலம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, கோவை, திருச்சி, புதுவை போன்ற நகரங்களுக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications