ஆமா.. நான் முஸ்லீம்தான்.. இது என் நாடு.. என்னங்கடா சந்தேகம் உங்களுக்கு.. வெளுத்தெடுத்த குஷ்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நான் ஒரு முஸ்லீமாம்.. எனக்கு என்னோட நாடு இந்தியாவில் இடமில்லையாம்.. சங்கிகள் சொல்கிறார்கள். ஆமாம்.. நான் ஒரு கான், நான் ஒரு முஸ்லீம், இந்தியா என் நாடு.. அதுல உங்களுக்கு என்ன சந்தேகம்" என்று கம்பீரமான ட்வீட் ஒன்றினை காங்கிரசின் கட்சியை சேர்ந்த குஷ்பு பதிவிட்டுள்ளார்.

மும்பையில் பிறந்த குஷ்புவின் இயற்பெயர் நகத்கான். முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். இவ்வளவு காலம் தமிழ்நாட்டில் இருக்கிறார் குஷ்பு. ஆனால், எப்போதுமே தான் ஒரு முஸ்லிம் என்று குஷ்பு காட்டிக்கொண்டதே இல்லை.

YES I AM A KHAN,I AM A MUSLIM, says Kushboo

பாஜகவைச் சேர்ந்தவர்கள் யாரேனும் ரொம்ப மோசமாக விமர்சித்தாலும், கிண்டல் செய்தாலும் மட்டுமே ட்விட்டர் பக்கத்தில் தனது நிஜப்பெயரை குஷ்பு வெளிப்படுத்துவார்.

அதாவது, அரசியல் ஆதாயத்துக்காக உண்மையான பெயரை குஷ்பு மறைக்கிறார் என்பதுதான் சோஷியல் மீடியாவில் இவர் மீது வீசப்படும் குற்றச்சாட்டு. இதற்கு நிறைய முறை குஷ்பு விளக்கம் தந்துள்ளார்.

"என் பேர் நகத்கான். என் அம்மா, அப்பா வெச்ச பேர் அது. ஆமாம். நான் ஒரு கான். இப்போ அதுக்கு என்ன? நான் தீவிரவாதி கிடையாது. இவ்வளவு வருஷம் கழிச்சுதான் இதை கண்டுபிடிச்சி இருக்கீங்களா? " என்று சளைக்காமலை பதிலடி தருவார்.

இப்போதும் இதே பிரச்சனை எழுந்துள்ளதால், ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், "துரதிர்ஷ்டவசமாக திரும்பவும் எனது சுயவிவரத்தை நான் திருத்த வேண்டியிருந்தது. சங்கி ஊமை முட்டாள்கள் அடிப்படையே தெரியாமல் பேசுகிறார்கள். அவர்களுக்கு எளிய அடிப்படைகள் புரியவில்லை.. அவர்கள் எனக்கு என் நாட்டில், என் இந்தியாவில் இடம் இல்லை என்று சொல்கிறார்கள். ஆமாம் நான் ஒரு கான், நான் ஒரு முஸ்லீம் மற்றும் இந்தியா என் நாடு.. இதில் என்ன சந்தேகம்" என்று காரசாரமாக கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+