திமுகவுடன் அமமுக கூட்டா? தங்க தமிழ்ச்செல்வனின் கருத்துக்கு டிடிவி தினகரனின் பதில் இதுதான்!
Recommended Video
சென்னை: திமுக குறித்து அமமுக உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சொன்னது சரியான கருத்துதான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.மொத்தம் 18 தொகுதிகளுக்கு தமிழக சட்டசபை இடைத்தேர்தல் நடந்தது. இன்னும் 4 தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சியை, திமுகவுடன் சேர்ந்து கவிழ்ப்போம் என்று அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்து இருந்தார். அதிமுக ஆட்சியை கவிழ்க்க இந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தங்க தமிழ்ச்செல்வன் சொன்னது சரியான கருத்துதான். அவர் யதார்த்தத்தை பேசி இருக்கிறார். இதில் எந்த தவறும் கிடையாது.
அதிமுக ஆட்சி கலைய போவது உண்மைதான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. நாங்கள் ஆட்சி கலைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை கண்டிப்பாக செய்வோம். எடப்பாடி பழனிசாமியை வீட்டிற்கு அனுப்புவோம்.
மோடியின் பொருளாதார கொள்கையால் எல்லோரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவரின் தவறான பொருளாதார கொள்கையால், தமிழகம் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கின்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தினகரன் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications