அரசியல் கோமாளி நீ தான்யா.. அண்ணாமலையிடம் மன்னிப்பு கேளுயா.. ராஜீவ் காந்தியிடம் பாஜக நாராயணன் ஆவேசம்!
சென்னை : அரைவேக்காடு ராஜீவ்காந்தி, அரசியல் கோமாளி நீ தான்யா, அண்ணாமலையிடம் மன்னிப்பு கேளுயா என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.
அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கவில்லை எனக் கூறும் அண்ணாமலை உண்மையிலேயே ஐபிஎஸ் படித்து பாஸ் ஆனாரா? அரசியல் கோமாளியாக இருக்கிறார் என விமர்சித்திருந்தார் திமுகவின் ராஜீவ் காந்தி.
இந்நிலையில், சட்டத்துறை அமைச்சர் கூறியதைக் குறிப்பிட்டு, அண்ணாமலையிடம் ராஜீவ் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் நாராயணன் திருப்பதி.
தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காதது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நளினி இப்படியே பேசிக்கிட்டிருந்தால் ராஜீவ் காந்தி இறந்துட்டாரானு கேட்பாரோ.. பாஜக நாராயணன் திருப்பதி

ஜி.ஓ பாஸ் பண்ணல
இதற்கிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை இதுவரை நடைமுறைபடுத்தவில்லை என்பதுதான் உண்மை. ஆளுநர் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காததால் சட்டம் காலாவதியாகிவிட்டது என்று திமுக கூறுகிறது. ஆனால் ஆளுனர் ஏற்கனவே அவசர சட்டத்துக்கு அனுமதி கொடுத்து இருந்தார். அப்படி இருக்கும்போது அவசர சட்டத்தை தமிழ்நாடு நடைமுறைப்படுத்தவில்லை.ஆளுநர் அனுமதி அளித்த பின் திமுக அரசு அரசாணையை வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் அதை திமுக செய்யவில்லை எனக் குற்றம்சாட்டி இருந்தார்.

அவசர சட்டமே ஜி.ஓ தான்யா
அவசர சட்டத்திற்காக திமுக அரசு அரசாணை வெளியிட்டு இருக்க வேண்டும், ஆனால் அதை செய்யவில்லை என அண்ணாமலை கூறியதை திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி கடுமையாக விமர்சித்தார். அரவேக்காடு அண்ணாமலை உண்மையிலேயே ஐபிஎஸ் மெரிட்ல பாஸ் ஆனிங்களானு சந்தேகமாகத்தான் இருக்கு! அவசர சட்டம் என்பதே அரசாங்கத்தின் GO தான். ஆன்லைன் அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு அரசு GO போடலைனு கேக்குற அரசியல் கோமாளி நீதான்யா, என்று கிண்டல் செய்திருந்தார்.

பரிசீலிக்கிறேன் - ஆளுநர்
இந்நிலையில் நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்து பேசினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரிடம் கோரியுள்ளோம். அதற்கு ஆளுநர் அந்த மசோதா என்னுடைய பரிசீலனையில் இருக்கிறது, அதில் உள்ள சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டு ஒப்புதல் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார், அவசர சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த பிறகுதான் அதற்கான விதிமுறைகளை வகுப்போம். அரசு பதிவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜிஓதான் போடப்படவில்லை எனத் தெரிவித்தார்.

என்ன பயன்?
இந்நிலையில், அமைச்சர் ரகுபதி கருத்து பற்றி அண்ணாமலை பதில் அளித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யக் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். அரசாணை பிறப்பிக்காமல் அவசரச் சட்டம் இயற்றி என்ன பயன் என்று தமிழக பாஜக முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம் என்றார்.

ஸ்டாலின் தான் பொறுப்பு
தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும். ஆளும் திமுக அரசின் திறனின்மை மற்றும் மெத்தனப் போக்கினால் அவசரச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம்சாட்டினார் அண்ணாமலை.

அரவேக்காடு
இந்நிலையில், திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, அரவேக்காடு அண்ணாமலை உண்மையிலேயே ஐபிஎஸ் மெரிட்ல பாஸ் ஆனிங்களானு சந்தேகமாகத்தான் இருக்கு!அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு அரசு GO போடலைனு கேக்குற அரசியல் கோமாளி நீதான்யா என்று கடுமையாக விமர்சித்திருந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.

மன்னிப்பு கேளுயா
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அரைவேக்காடு ராஜீவ்காந்தி, அரசியல் கோமாளி நீ தான்யா. உங்க அமைச்சர் கூறுவதை மறுத்தாலும் நீ கோமாளி நீ தான்யா. அண்ணாமலையிடம் மன்னிப்பு கேளுயா" என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.