தமிழக கோயில்களில் உதவிதொகையுடன் அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி.. சேகர்பாபு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: கோவில்களில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம். உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லா பயிற்சியும், ஊக்கத்தொகையாக மாதம் ரூ.3 ஆயிரமும், பகுதி நேரத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,500-ம் வழங்கப்படுகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்கள் சார்பில் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பள்ளிகள், பிரபந்த விண்ணப்பர் பயிற்சி பள்ளி மற்றும் வேத ஆகம பாடசாலைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் படிக்கும் மாணவர்களுக்கு உணவு, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லா பயிற்சியும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் சேர விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உதவி தொகை: இந்த பயிற்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லா பயிற்சியும், ஊக்கத்தொகையாக மாதம் ரூ.3 ஆயிரமும், பகுதி நேரத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,500-ம் வழங்கப்படுகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: 13 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் அர்ச்சகர் பயிற்சி பள்ளிக்கும், 13 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்கள் ஓதுவார் பயிற்சி பள்ளிக்கும், 13 வயது முதல் 16 வயது வரை இருப்பவர்கள் நாதஸ்வர பயிற்சி பள்ளிக்கும் சேரலாம். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம்.

வேத ஆகம பாட சாலை: 12 முதல் 16 வயது நிரம்பியவர்கள் வேத ஆகம பாடசாலைக்கும், 8 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரபந்த விண்ணப்பர் பயிற்சி பள்ளிக்கும் சேர முடியும். இவர்கள் 5-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மேலும் இவர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாகவும், தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்களாகவும் இருக்கவேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?: மாணவர் சேர்க்கைக்கான படிவங்கள் கோவில்களின் அலுவலகத்தில் அலுவலக வேலை நேரத்தில் நேரிலோ அல்லது அந்தந்த கோவில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளம் மூலமும் அறிந்து கொள்ளலாம்" என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications