தட்கல் டிக்கெட்.. பேமண்ட் தான் சிக்கலாகுதா? இப்படி புக்கிங் பண்ணி பாருங்க! பிரச்சினையே இருக்காது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயிலில் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்யும் போது ஒரு சில நேரம் பணம் எடுக்கப்பட்டுவிடும். ஆனால் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாது. பிடித்தம் செய்யப்பட்ட பணமும் ரீபண்ட் ஆவதற்கு 4 முதல் 5 நாட்கள் ஆகும். ஆனால் இப்படி நடக்காமல் இருக்க ஒரு வழி இருக்கிறது. இதன் படி புக்கிங் செய்தால் டிக்கெட் கன்ஃபார்ம் ஆனால் மட்டுமே பணம் பிடித்தம் செய்யப்படும். அந்த வழி என்ன? அதனை எப்படி பயன்படுத்துவது என்று இங்கே விரிவாக பார்க்கலாம்.

ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. கடைசி நேரத்தில் பிளான் செய்து வெளியூர்களுக்கு செல்ல விரும்புவர்கள் ரயிலில் தட்கல் டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ள முடியும். தட்கல் டிக்கெட்டுகளை பொறுத்தவரை ஏசி கோச்களுக்கு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத சாதாரண படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட கோச்களுக்கான புக்கிங் காலை 11 மணிக்கும் தொடங்கும்.

tatkal ticket railway

தட்கல் டிக்கெட்: தட்கலில் டிக்கெட் கிடைப்பதற்கு எல்லாம் தனி அதிர்ஷ்டம் வேண்டும் என நினைக்கும் நிலைமை உள்ளது. ஏனெனில் தட்கல் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆன சில நிமிடங்களில் டிக்கெடுகள் காலியாகி வெயிட்டிங் லிஸ்டில் போய் நின்று விடும். அதுபோக பயணிகள் எதிர்கொள்ளும் இன்னொரு மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் சில நேரங்களில் பணம் பிடிக்கப்பட்டு விடும். ஆனால், டிக்கெட்டுகள் கன்ஃபார்ம் ஆகாது..


இந்த பணம் திரும்ப கிடைக்க குறைந்தது 4 முதல் 5 நாட்கள் வரை ஆகும். நடுத்தர மக்கள் பலரும் மாதக் கடைசியில் அக்கவுண்டில் குறைந்த அளவே பணத்தை வைத்து இருப்பார்கள். அவர்களுக்கு இதேபோல பணம் பிளாக் ஆகிவிட்டு.. நான்கு ஐந்து நாட்கள் காத்திருப்பது பெரும் சிரமத்தை கொடுக்கும். இதற்கு வேறு எதாவது வழி இருக்கிறதா என்று கேட்டால்.. ஆம் இருக்கிறது.

ஆட்டோ பே ஆப்ஷன்: தட்கல் டிக்கெட் போடும் போது, வேகமாக புக் செய்யவும், பணம் இப்படி மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும் ஒரு வழி இருக்கிற்து. அதாவது டிக்கெட் புக் செய்யும் போது ஆட்டோ பே ஆப்ஷனை பயன்படுத்தலாம். இதில் யுபிஐ (OTM) / டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்தலாம். ஐஆர்சிடிசியின் ஐபே பேமேண்ட் கேட்வே வழியாக இந்த ஆட்டோபே ஆப்ஷன் கிடைக்கும்.

எப்படி செயல்படும்?: இந்த யுபிஐ ஆட்டோபே எப்படி செயல்படும் என்றால், டிக்கெட் புக்கிங் செய்யும் போது யூசரின் வங்கி கணக்கில் குறிப்பிட்ட அந்த தொகை தற்காலிகமாக ஹோல்டு செய்து வைக்கப்படும். டிக்கெட் கன்பார்ம் ஆன பிறகு ஐஆர்டிசி பணத்தை எடுத்துக்கொள்ள யூசர் அனுமதி கொடுக்க முடியும். எளிதாக சொல்வது என்றால், டிக்கெட்டுக்கான பணம் ரிசர்வ் செய்து வைக்கப்படுமே தவிர பி.என்.ஆர் நம்பர் ஜெனரேட் ஆகும் வரை கழிக்கப்படாது.

பணம் உடனே ரிட்டன் ஆகிடும்: ஒருவேளை டிக்கெட் கன்பார்ம் ஆகாவிட்டால், ஹோல்டு செய்து வைக்கப்பட்டு இருக்கும் பணம் உடனடியாக யூசரின் வங்கி கணக்கிற்கு ரிட்டர்ன் ஆகிவிடும். இந்த ஆப்ஷன் பயன்படுத்தி புக் செய்தால் உறுதி செய்யப்படாத டிக்கெட்டுகளுக்காக பணத்தை செலுத்திவிட்டு பணம் ரிட்டர்ன் ஆவதற்காக காத்திருக்க தேவையில்லை.

டிக்கெட் புக்கிங் செய்யும் போது பேமேண்ட் பக்கத்தில் ஆட்டோ பே, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகிய விவரங்கள் திரையில் காட்டும். இதில் முதல் ஆப்ஷனாக இருக்க கூடிய ஆட்டோபே ஆப்ஷனை செலக்ட் செய்து மேற்கூறியவாறு புக் செய்து கொள்ள முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+