நாடு முழுக்க.. வருமான வரி செலுத்துவோருக்கு போன தங்கமான செய்தி.. இதைத்தான் எதிர்பார்த்து இருந்தாங்க
சென்னை: வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவிற்கு பின் தாக்கல் செய்தால் refund கிடைக்காது என்ற வதந்தி கடந்த சில நாட்களாக பரவி வந்தது. புதிய வருமான வரி சட்டத்தில் இந்த விதி சேர்க்கப்பட்டதாக பொய்யாக செய்திகள் பரவி வந்தன.
இந்த நிலையில் அப்படி எந்த விதியும் சேர்க்கப்படவில்லை. வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவிற்கு பின் தாக்கல் செய்தாலும் refund கேட்கலாம். முந்தைய வருமான வரி சட்டத்தில் இந்த விதி உள்ளது. அதே விதி புதிய வருமான வரி சட்டத்திலும் தொடரும் என்று வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

வருமான வரி தாக்கல் முறை:
பல்வேறு வகையான வரி செலுத்தும் முறை இருப்பதால் வரி செலுத்துவோருக்கு வெவ்வேறு காலக்கெடு உள்ளது. கணக்குகள் தணிக்கை செய்யத் தேவையில்லாத தனிநபர்கள் மற்றும் பிற வரி செலுத்துவோர் மதிப்பீட்டு ஆண்டின் ஜூலை 31 ஆம் தேதிக்குள் அசல் ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும். கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டியவர்கள் அதாவது audit செய்த பின் வரி செலுத்துவோர், மதிப்பீட்டு ஆண்டின் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தணிக்கை அறிக்கையை முதலில் சமர்ப்பிக்க வேண்டும். தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், வரி செலுத்துவோர் மதிப்பீட்டு ஆண்டின் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.
சர்வதேச பரிவர்த்தனைகளைக் கொண்ட வரி செலுத்துவோர் மதிப்பீட்டு ஆண்டின் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், வரி செலுத்துவோர் மதிப்பீட்டு ஆண்டின் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும்.
அதே சமயம் தனிநபர் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான தேதியைத் தவறவிட்டால், அவர்கள் தாமதமான வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்யலாம். தற்போதைய வருமான வரிச் சட்டத்தின்படி, தாமதமான வருமானத்தைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மதிப்பீட்டு ஆண்டின் டிசம்பர் 31 ஆகும். இதேபோல், அசல் அல்லது தாமதமான ITR இல் தவறு ஏற்பட்டால், ஒரு தனிநபர் திருத்தப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்யலாம். திருத்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மதிப்பீட்டு ஆண்டின் டிசம்பர் 31 ஆகும். வருமான வரிச் சட்டத்தின் 234F பிரிவின் கீழ், தாமதமாக ரிட்டன் தாக்கல் செய்வதற்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
புதிய வருமான வரி சட்டம்
'வருமான வரி மசோதா 2025' என அழைக்கப்படும் புதிய வருமான வரி மசோதா, ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. நேற்று இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961, மொத்தம் 298 பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த புதிய I-T மசோதாவில் இது 536 உட்பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது, தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961க்குப் பதிலாக கொண்டுவரப்படும். மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இது 'வருமான வரிச் சட்டம், 2025' என்று அழைக்கப்படும்.
'மதிப்பீட்டு ஆண்டு', 'நிதி ஆண்டு' மற்றும் 'முந்தைய ஆண்டு' ஆகிய வார்த்தைகளை 'வரி ஆண்டு' என்ற ஒரு என்று மாற்றும். வரி ஆண்டு என்று ஏப்ரல் 1, 2026 முதல் 12 மாத நிதிக் காலத்தை கொண்டது ஆகும். இதன் வரைவு மசோதா தற்போது வெளியாகி உள்ளது. இந்த மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் (மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு பிரிவுகளாக மாறும்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications