மிஸ் பண்ணிடாதீங்க! இன்று முழுவதும் சென்னையில் வெறும் 5 ரூபாயில் மெட்ரோவில் பயணிக்கலாம்! எப்படி?
சென்னை: இன்று முழுவதும் சென்னையில் மெட்ரோ ரயிலில் 5 ரூபாயில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் நிறுவனம், 2007ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி நிறுவப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான வழித்தடத்திலும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையிலும் 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.

பின்னர் படிப்படியாக சென்னை மெட்ரோ சேவை நீட்டிக்கப்பட்டு, தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மெட்ரோ நிறுவனத்தின் ஆண்டு விழாவையொட்டி, கடந்த டிசம்பர் 3ஆம் தேதி சென்னையின் எந்த பகுதிக்கும் வெறும் 5 ரூபாயில் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக பொதுமக்கள் இந்த சலுகையை முழுமையாக பயன்படுத்த முடியாமல் போனது. இதனால், வேறு ஒரு நாளுக்கு இந்த சலுகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை ஏற்ற மெட்ரோ ரயில் நிர்வாகம், இன்று (டிசம்பர் 17) ஞாயிற்றுக்கிழமை அன்று 5 ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, இன்று முழுவதும் ரூபாய் 5 கட்டணத்தில் மெட்ரொ ரயிலில் பயணம் செய்யலாம். அதே சமயம், கியூ ஆர் டிக்கெட்டுகள், மொபைல் கியூ ஆர், பேடிஎம், வாட்ஸ் அப், போன்பே உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். சிங்கார சென்னை அட்டை, பயணச்சீட்டு, பாஸ்கள், சிஎம்ஆர்எல் மொபைல் ஆப் உள்ளிட்டவற்றின் மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு இந்த 5 ரூபாய் சலுகை பொருந்தாது என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
5 ரூபாயில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என்ற சூப்பரான சலுகை காரணமாக இன்று மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கூடுதல் ரயில்களை இயக்கவும் செனை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications