Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமான் மகன் 'குழந்தை' மாவீரன் பிரபாகரன் தெரியும்.. இன்னொரு மகன் 'ஆகில்'யன்.. இவர்தான் பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இன்னொரு மகன் ஆகில்யன் காளிமுத்துவை சமூக வலைதளங்கள் பேசுபொருளாக்கி இருக்கின்றன.

நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கும் தமிழ்நாடு முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் துணைவியார் மகள் கயல்விழிக்கும் 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் புடைசூழ பிரம்மாண்டமாக சென்னையில் சீமான் திருமணம் நடைபெற்றது.

You Know Naam Tamilar Seemans Elder Son Aakilyan?

சீமான் - கயல்விழி தம்பதியினருக்கு 2019-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த ஆண் குழந்தைக்கு மாவீரன் பிரபாகரன் என பெயர் வைத்தனர் சீமான் - கயல்விழி தம்பதியினர். மாவீரன் பிரபாகரனின் காதணி விழாவையும் தடபுடலாக நடத்தி இருந்தார் சீமான்.

இந்த நிலையில் அண்மை காலமாக சீமானின் மூத்த மகன் குறித்து சமூக வலைதளங்கள் வீடியோக்களை வெளியிட்டு வந்தன. சீமான் பேட்டிகளிலும் 2 மகன்கள் என குறிப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு தற்காப்பு கலை பயிற்சி நிறுவனத்தின் விருதுகள் வழங்கும் விழாவுக்கு சீமான் சென்ற போது, ஆகில்யன் காளிமுத்துவுக்கு 2-வது பரிசு வழங்கப்பட்டது. கயல்விழியும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். அப்போது 'மகன்' என குறிப்பிட்டு ஆகில்யன் செயல்பாடுகளை விவரித்திருந்தார் சீமான்.

You Know Naam Tamilar Seemans Elder Son Aakilyan?

பின்னர் சீமானுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் எனவும் ஊடகங்கள் எழுதின. அப்போதுதான் சீமானின் மனைவி கயல்விழியின் சகோதரியான மறைந்த அமுதாவின் மகன்தான் ஆகில்யன் காளிமுத்து என வெளிப்படையாக தெரிந்தது. சித்தியிடம் வளர்ந்து வரும் ஆகில்யனை மகனாகவே சீமான் - கயல்விழி தம்பதியினர் வளர்த்து வருகின்றனர். இதனால்தான் தமக்கு 2 மகன்கள் என சீமான் பேட்டிகளில் தொடர்ந்து தெரிவித்தும் வருகிறார்.

தற்போதும் பொங்கல் தினத்தை முன்னிட்டு மகன் ஆகில்யனுடன் சில ஊடகங்களுக்கு சீமான் பேட்டி கொடுத்திருக்கிறார். 2019-ல் பிறந்த மாவீரன் பிரபாகரனை அதிகம் அறிந்தவர்களுக்கு ஆகில்யனின் பின்னணி அதிகம் தெரியவில்லை. அதனால் யார் இந்த மகன் என சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி பேசி வருகின்றனர். இதற்கு ஆகில்யன் குறித்து அறிந்த நாம் தமிழர் கட்சியினரும் சீமானுக்கு நெருக்கமான வட்டாரங்களும் கயல்விழியின் அக்கா அமுதாவின் மகன் ஆகில் என விளக்கம் தந்தும் வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+