பப்ஜி விளையாட வந்த சிறுமிகளிடம் பல லட்சம் மோசடி செய்த மதன்.. கறுப்பு ஆடுகளையும் தேடும் போலீஸ்!
சென்னை: யூடியூபர் மதன் சிறுமிகளிடம் பல லட்சங்களை பெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. இவர் மீது தமிழ்நாடு முழுவதும் 159 புகார்கள் குவிந்துள்ளன.
Recommended Video
பப்ஜி விளையாட்டை எப்படி விளையாடுவது என்பதை சாட்டிங் மூலம் சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்க யூடியூப் சேனல் வைத்திருந்தவர் மதன். இவர் இது போல் விளையாட்டுக்கு ஐடியா கேட்கும் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து புகாரின் பேரில் புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து மதனை தேடி வருகிறார்கள். இந்த மதன் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்.

தந்தை
இவரை பிடிக்க இவரது மனைவி, தந்தையிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர் மீது தமிழ்நாடு முழுவதும் 159 புகார்கள் வரப்பெற்றுள்ளன. இவற்றை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பப்ஜி கேம் விளையாட்டு
பப்ஜி கேம் விளையாடும் போது சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளார். முதலிரவுக்கு செல்லும் போது எப்படியிருக்க வேண்டும் என சேட் செய்து அந்தரங்கத்தை பற்றி பேசியுள்ளார்கள். இரவு நேரங்களிலும் சாட்டிங் செய்து பணம் பறிப்பிலும் மதன் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு நிதி
இவர் விளையாட்டு சேனல் மூலமாக கொரோனா நோயாளிகளுக்கு நிதி திரட்டியுள்ளார். இதன் மூலம் பல லட்சம் பணத்தை பெற்றது தெரியவந்தது. இந்த நிலையில் இந்த பணம் முழுமையாக நோயாளிகளுக்கு போய் சேர்ந்ததா என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

யூடியூப் சேனல் விருது
பிளாக் ஷீப் என்ற யூடியூப் சானலின் சார்பில் மதனுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கும் விழாவுக்கும் மதன் வராமல் அவரது கூட்டாளிகளை மட்டும் அனுப்பி வைத்துள்ளார். மேலும் மதன் வருவதாக சொன்னாரே அவர் வரவில்லையா என நிகழ்ச்சியாளர் கேட்ட போது அவர் வந்திருக்கலாம், வராமலும் இருந்திருக்கலாம் என அந்த கூட்டாளிகள் சொன்னதை வைத்து அந்த கும்பலில் இருந்தவர்களில் ஒருவர் மதனாக இருக்கும் என தெரிகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications