முதல்முறை போட்டி.. செம டஃப் கொடுத்த மநீம பத்மப்ரியா.. 12.2 சதவீதத்தை அள்ளிய தமிழச்சி!
சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட யூடியூபர் பத்மப்ரியாவுக்கு மொத்தம் 33 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. அந்த தொகுதியில் கிடைத்த மொத்த ஓட்டுக்களில் இவருக்கு மட்டும் 12.2 சதவீதம் கிடைத்துள்ளது. இது ஒரு நல்ல ஆரம்பமாகவே பார்க்கப்படுகிறது.
Recommended Video
யூடியூபர் பத்மப்ரியா, சென்னை தமிழச்சி என்ற ஒரு சேனலை தொடங்கி அதில் சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களை பேசி வருகிறார். அப்படி இவர் பேசிய சில வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
பத்மப்ரியா தனது யூடியூப் சேனலில் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பணிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை உள்ளிட்டவற்றிற்கு எதிராக இவர் குரல் கொடுத்தது இளைஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரை திரும்பி பார்க்க வைத்துவிட்டது.

பத்மப்ரியா
இதையடுத்து மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயல் சட்டசபைத் தொகுதியில் பத்மப்ரியா போட்டியிட்டார். டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்ட இவருக்கு மக்கள் 33401 வாக்குகளை அள்ளி கொடுத்துள்ளார்கள். புதியவரான பத்மப்ரியாவுக்கு இத்தனை வாக்குகள் கிடைப்பதிருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம்
அதிக வாக்குகளை பெற்றதுடன் அந்த தொகுதியில் 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். அந்த தொகுதியில் கிடைத்த மொத்த வாக்குகளில் இவருக்கு 12.2 சதவீதம் கிடைத்துள்ளது. இதுகுறித்து பத்மப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் கடுமையாக போராடியுள்ளோம்.

முதல்முறை
கமல்ஹாசன், டாக்டர் மகேந்திரன் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் மக்கள் நன்மைக்காக போட்டியிட்ட ஒவ்வொரு போராளிகளையும் எண்ணி பெருமையடைகிறேன். மதுரவாயல் தொகுதி வேட்பாளராக நான் 33 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளை பெற்றுள்ளேன். அதுவும் முதல் முறை போட்டியிட்டதில் இத்தனை வாக்குகள்.

அரசியல் ஆரம்பம்
எனக்கு வாக்களித்த மக்கள், தேர்தல் பணியாற்றிய அதிகாரிகள், ஊடகங்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது முழு முயற்சியுடன் நான் போட்டியிட்டேன் என்பதை என்னால் நிச்சயமாக கூறமுடியும். எனக்கு உருதுணையாக இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அனைவருக்கும் நன்றிகள். இது அரசியலில் ஆரம்பமே என தெரிவித்துள்ளார்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications