போன வாரம்தான் நிச்சயதார்த்தம்.. செல்பி எடுக்க ஆசை.. கிணற்றில் விழுந்த ஜோடி.. பெண் பரிதாப மரணம்!
செல்பி எடுக்க முயன்ற பெண் கிணற்றில் இடறி விழுந்து பலியானார்
Recommended Video
சென்னை: போன வாரம்தான் நிச்சயதார்த்தம் ஆனது.. அடுத்த மாசம் கல்யாணம்.. வருங்கால கணவனுடன் சேர்ந்து நின்று செல்பி எடுத்து கொண்டிருந்த மெர்சி, பக்கத்தில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து பிணமானார்!
சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர் மெர்ஸி ஸ்டெபி. இவருக்கு அப்பு என்பவரை வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர். அப்புக்கு 24 வயதாகிறது.
போன வாரம்தான், இரு வீட்டு பெரியவர்கள் முன்னிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. ஜனவரியில் கல்யாணத்தை வைத்திருக்கிறார்கள்.

விவசாய நிலம்
இந்நிலையில் அப்புவும், மெர்சியும் பைக்கில் வண்டலூர்-மீஞ்சூர் சாலை வழியாக சென்றனர். அப்போது, கண்டிகை என்ற கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் தனிமையில் உட்கார்ந்து பேசி உள்ளனர். பிறகு ஒன்றாக சேர்ந்து நின்று செல்பி எடுக்கவும் முயன்றனர். அப்போது, கால் தவறி பக்கத்தில் இருந்த கிணற்றில் மெர்சி விழுந்தார். அவரை பிடிக்கச்சென்ற அப்புவும் கிணற்றில் இடறி விழுந்தார்.

மீள முடியவில்லை
இருவருக்குமே நீச்சல் தெரியாது.. அதுவும் மெர்சி கிணற்றில் இருந்த சேற்றில் மிக மோசமாக சிக்கிக்கொண்டார். தன்னாலும் மீள முடியாமல், மெர்சியையும் காப்பாற்ற முடியாமல் அப்பு கிணத்துக்கள் இருந்தே கூச்சல் போட்டார்.

போராடி மீட்டனர்
இதை கேட்ட பிறகு, அங்கு அந்த நிலத்தின் உரிமையாளர் சடகோபன் ஓடிவந்தார். கிணற்றுக்குள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அப்புவை மட்டும் போராடி மீட்டார். பொதுமக்கள் உதவியுடன் ஆஸ்பத்திரியிலும் சேர்த்தார். ஆனால் மெர்சியை மீட்கவே முடியவில்லை.

சடலம்
உடனடியாக ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து, கிணற்றில் சிக்கியிருந்த மெர்சியை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி சடலமாக மீட்டனர். நிச்சயமான ஒரு வாரத்தில் மெர்சி உயிரிழந்தது பெரும் பட்டாபிராம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், செல்பி மோகத்தை நினைத்து வருத்தமும், கவலையையும் நிறையவே ஏற்படுத்தி வருகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications