நைட் கிளப்களில்.. பரபரக்கும் போதை மாத்திரைகள்.. வீழ்த்தப்படும் பெண்கள்.. சீரழியும் கலாச்சாரம்
இளம்பெண்கள் போதை மாத்திரைகளுக்கு வீழ்ந்து வருகிறார்கள்
Recommended Video
சென்னை: சென்னையில் உள்ள பல்வேறு இரவு பார்களில் அதிர வைக்கும் ஒரு சமாச்சாரம் அரங்கேறிக் கொண்டிருக்கிறதாம். இதைத் தடுக்காமல் போனால் மிகப் பெரிய சீரழிவை இளைஞர் சமுதாயம், குறிப்பாக மாணவர்கள் சந்திக்க நேரிடும் என்று சொல்கிறார்கள்.
விதம் விதமான போதைகளில் மூழ்குவது இன்றைய இளைஞர் சமுதாயத்தில் பலருக்கும் பொழுது போக்காக மாறியுள்ளது. அனைவரையும் இதில் குற்றம் சாட்ட முடியாது. ஆனால் பலர் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

இந்த மாதிரியான போதை அடிமைகளை குறி வைத்து ஒரு பெரிய குரூப்பே இயங்கி வருகிறது. சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற கும்பல்களுக்கு குறைவே இல்லை.
சென்னையைப் பொறுத்தவரை நைட் கிளப்களில் நடக்கும் அட்டகாசத்தை சொல்லி மாள முடியாது. பல்வேறு அதிகார வர்க்கத்தினரின் துணையோடு இங்கு பல்வேறு கசமுசாக்கள் நடக்கின்றன. காவல்துறையால் இவர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் ஏதாவது ஒரு அதிகாரத்தை துணைக்கு கொண்டுதான் இவர்கள் இந்த செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இப்போது கூட ஒரு பரபரப்பான தகவல் உலவி வருகிறது. அதாவது நைட் கிளப்களுக்கு வரும் இளம் பெண்களைக் குறி வைத்து ஒரு முக்கியமான கும்பல் இறங்கியுள்ளதாம். அவர்களை அடையாளம் கண்டு கொண்ட பின்னர் தங்கள் பக்கம் இழுக்கிறார்களாம். பின்னர் போதை மாத்திரை கொடுத்து அவர்களை பாலியல் ரீதியாக சீரழிக்கிறார்களாம்.
இந்த போதை மாத்திரையை ஒருமுறை பயன்படுத்தி விட்டால் திரும்பத் திரும்ப அது கேட்குமாம். எனவே இந்த மாத்திரையை வைத்து பெண்களை அடிமையாக்கி தங்களது இச்சைக்கு இக்கும்பல் பயன்படுத்திக் கொள்கிறதாம். இந்த கும்பலின் லீலையில் சிக்கி மானம், மரியாதை, கற்பு என எல்லாவற்றையும் இழந்த பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சொல்கிறார்கள்.
காம இச்சைக்கு மட்டுமல்லாமல் பணம் கொட்டும் மெஷின்களாகவும் இந்தப் பெண்களை இக்கும்பல் பயன்படுத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். அதுதான் கொடுமையானது. பெரிய பெரிய பணக்கார கோடீஸ்வர பெண்களைத் தேர்வு செய்து இப்படி மாட்ட வைத்து டபுள் லாபம் பார்த்து வருகிறதாம் இந்தக் கும்பல்.
இந்த கும்பலில் ஒரு நடிகையும் இருக்கிறாராம். இவர்தான் பெண்களை வளைத்துப் பிடிக்க பயன்படுத்தப்படும் தூண்டிலாம். இவர் மூலமாக சிக்கும் பெண்களை இந்தக் கும்பலில் உள்ள ஒரு அரசியல் புள்ளியும், இன்னொரு திரைத்துறை பிரபலமும் பந்தாடி காரியம் சாதித்துக் கொள்கிறார்களாம். இவர்கள் குறித்து அரசல் புரசலாக தகவல்கள் இருந்தாலும் கூடஇவர்கள் மீது கை வைக்க முடியவில்லையாம். காரணம், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இவர்கள் தப்பி வருவதாக சொல்கிறார்கள்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications