என்னடா.. நீ தின்ன மிச்சத்தை நான் திங்கணுமா.. ஆத்தாடி.. முடியலம்மா முடியலை
டிக்டாக் ஆப்பில் நடித்துள்ள இளம் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
சென்னை: "எப்ப்ப்பா... இது உலக நடிப்புடா சாமி" என்ற ரேஞ்சுக்கு வசனம் பேசி, நடிப்பை பக்கெட் பக்கெட்டா கொட்டி, அதே பக்கெட்டில் கண்ணீரையும் பிழிந்து தள்ளிவிட்டார் ஒரு பெண்!
இப்போதெல்லாம் டிக்டாக் ஆப் மக்களிடையே ரொம்ப பிரபலமாகி வருகிறது. ஆரம்பத்தில் இளசுகள்தான் இதில் இறங்கி திறமைகளை காட்டினார்கள். ஆனால் பெரியவர்கள், முதல் குழந்தைகள் வரை இந்த ஆப் சென்று அவர்களின் மனதில் உட்கார்ந்துவிட்டது.

நல்லா இருக்கோ இல்லையோ, திறமை இருக்கோ இல்லையோ.. எந்த வித கூச்சமும், வெட்கமும் இல்லாமல் ஆட்டம், பாட்டம், நடிப்பு என மக்கள் தங்கள் கலைதாகத்தை இந்த ஆப்பில் வெளிக்காட்டி வருகிறார்கள்.
அப்படித்தான் ஒரு பெண் நடிப்பு திறமையை காட்டி உள்ளார்.. சிவாஜி கணேசனை நடிப்பில் மிஞ்சிவிட்டார் போங்கள்.. அப்படி ஒரு நடிப்பு. பார்க்க என்னவோ ஹவுஸ்வொய்ஃப் போல ரொம்ப சாதாரண தோற்றத்துடன் இருக்கிறார். இவர் ஒரு வசனத்தை பேசி நடிக்க, அவருக்கு பின்னாடியே ஒருத்தர் டைரக்டர் படம் பிடிப்பது போல பாவ்லா காட்டுகிறார்.
"எனக்கு ஒரே ஒரு ஆசைதான்ப்பா.. அவர் சாப்பிட்ட மிச்சத்தை நான் சாப்பிட்டு.. அவர் மடியிலேயே வாழ்ந்திடணும்ப்பா" என்கிறார்.
உடனே அந்த டைரக்டர்"மேடம் உங்க வீட்டுல இருந்து உங்க புருஷன் போன் பண்றாரு" என்று சொல்ல.. "புருஷனா" என்று கேட்டு போனை வாங்கி பேசுகிறார் அந்த பெண். "என்னடா.. ஹோட்டல்ல சாப்பாடு வாங்கியிருக்கியா.. என்னது.. நீ தின்னதை நான் திங்கணுமா? மூதேவி.. குப்பையில போடு.. நாய்க்கு போடு.. இல்லைன்னா உங்க அம்மாவுக்கு குடுடா" என்று சொல்லி போனை கட் பண்ணுகிறார். திரும்பவும் நடிப்பை தொடர்கிறார்.. "நீங்க சாப்பிட்ட மிச்சத்தை.. நான் சாப்பிட்டு.. கணவனே கண்கண்ட தெய்வம்" என்று நடித்து கொண்டே போகிறார்!
ஆத்தாடி.. இப்படி ஒரு நடிகையை சாவித்திரி கிட்ட கூட நாங்க பார்க்கலையேம்மா!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications