செல்போனை பறிப்பது எப்படி?.. யூடியூப் பார்த்து கற்று கொண்ட டேனியல்.. ஏதும் அறியாத சித்தப்பாவும் கைது
சென்னை: அண்ணன் மகனுக்கு செல்போன் மீது திடீர் ஆசை வந்ததால் யூடியூப் பார்த்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டதையடுத்து ஏதும் அறியாத அவரது சித்தப்பாவும் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணி பகுதியில் நடந்து சென்ற செளந்தர்யா என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இது குறித்து செல்போனை பறிகொடுத்த தனியார் நிறுவன ஊழியரான செளந்தர்யா சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.

பெயிண்டர்
விசாரணையில் அவர்கள் பெயிண்டர் வேலை செய்யும் குன்றத்தூரை சேர்ந்த டேனியல்(23), மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த சகாயராஜ்(47), என்பதும் தெரியவந்தது. இருவரும் உறவினர்கள், டேனியலின் சித்தப்பாதான் சகாயராஜ். இருவரும் ஒன்றாக மது குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என தெரியவந்தது.

சித்தப்பா சகாயராஜ்
அவ்வாறு இருவரும் நேற்று சகாயராஜ் வீட்டில் மது அருந்திவிட்டு பின்னர் டேனியலை வீட்டில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். அப்போது திருநீர்மலை சாலை, நாகல்கேணி அருகே சென்ற போது பெண் ஒருவர் செல்போன் பேசிக் கொண்டு சென்றதை கண்ட டேனியலுக்கு தனக்கு செல்போன் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது.

செல்போன் பறிப்பு
இதனிடையே யூடியூப்பில் செல்போனை பறிப்பது எப்படி என்பது குறித்து ஏற்கெனவே பார்த்து வைத்திருந்த நிலையில் அந்த செல்போனை எப்படியாவது பறித்துவிட வேண்டும் என திட்டமிட்டார். பின்னர் அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்துவிட்டார்.

செல்போன்
அப்போது சகாயராஜ் டேனியலிடம் என்ன செய்தாய் என கேட்க அதற்கு டேனியலோ எனக்கு செல்போன் இல்லை, அதனால் அந்த பெண்ணிடம் இருந்து பறித்தேன் என்றார். பின்னர் இதெல்லாம் தவறு, அந்த பெண்ணிடம் கொண்டு போய் கொடுத்து விடலாம் என வண்டியை திருப்பியுள்ளார் சகாயராஜ்.

கூச்சலிட்ட பெண்
இதனிடையே அந்த பெண் கூச்சலிட்டதால் அங்கு பொது மக்கள் திரண்டிருந்தனர். இதனால் சகாயராஜ் மாட்டினால் அடித்து விடுவார்கள் என எண்ணி தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து வாகன பதிவெண் மூலம் இருவரையும் கைது செய்து, செல்போன், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்?












Click it and Unblock the Notifications