நைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி!
பெண்களிடம் நகை பறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
சென்னை: "நைட் நேரத்துல தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி" என்று அதிர வைக்கிறார் கார்த்தி என்ற இளைஞர்!
சென்னை தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தன. இது சம்பந்தமான புகார்களும் அந்தந்த ஏரியா ஸ்டேஷனுக்கு வந்து கொண்டே இருக்கும்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இந்த விஷயத்தில் தீவிரமாக இறங்கினர். முதல்வேலையாக புகார் வந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, இவ்வளவு களேபரத்துக்கும் காரணம் ஒரே ஒரு நபர்தான் என்பதை கண்டுபிடித்தனர்.
அந்த வீடியோக்களில், இந்த நபர் பைக்கில்தான் வருகிறார். தனியாக செல்லும் பெண்களின் அருகில் பைக்கில் ஸ்லோவாக சென்று படக்கென்று அந்த பெண்ணின் கழுத்தில் உள்ள சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்புகிறார். இப்படியே ஒவ்வொரு ஏரியாவிலும் செய்கிறார்.
எல்லாமே நைட் நேர சம்பவங்கள்தான். இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபரையும் போலீசார் தேடி வந்தனர். கடைசியில் சுற்றி வளைத்தும் பிடித்துவிட்டனர். பெயர் கார்த்தி என்பது... சாத்தாங்காடு பகுதியை சேர்ந்தவர்.. ஆளை பிடித்தவுடன்தான் தெரிகிறது ஏகப்பட்ட வழக்குகள் உள்ள நபர் என்பது.
பிறகு கார்த்தி அளித்த வாக்குமூலத்தில், "நைட் நேரத்தில் பைக்கில் கிளம்பிடுவேன்... தனியாக செல்லும் பெண்களைதான் முதலில் நோட்டமிடுவேன், பின்னாடியே போயி, செயின் இருந்தால் பறிச்சிடுவேன்.. இல்லாட்டி செல்போன்கள்தான்.. செல்போன் பேசிட்டே யாராவது பெண்கள் போனால் எனக்கு செயின் அறுக்க ரொம்ப சுலபம்" என்கிறார் இந்த கொள்ளையன். இவரிடம் செல்போன்கள், நகைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications