கல்யாணம் செய்தது 7 பெண்களைதான்.. ஜாலியாக இருந்தது மொத்தம் 24 பெண்கள்.. அதிர வைத்த "போலி போலீஸ்"!
6 பெண்களை திருமணம் செய்த போலி போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
சென்னை: "மொத்தம் 7 பெண்களை கல்யாணம் செய்துள்ளேன்.. ஆனால் 24 பெண்களை காரில் கடத்தி கொண்டு போய் ஜாலியாக இருந்துள்ளேன்" என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் போலி போலீஸ்கார இளைஞர் ஒருவர்!
எழும்பூரைச் சேர்ந்த, 19 வயது பெண்ணை காணவில்லை என்று கடந்த ஜுன் 30-ம் தேதி பெற்றோர்கள் ஸ்டேஷனில் புகார் தந்தபோது, விஷயம் இவ்வளவு சீரியஸ் ஆகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாதுதான். இதையடுத்துதான், ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
எழும்பூர் போலீசார், தனிப்படை அமைத்து, காணாமல் போன பெண்ணை தீவிரமாக தேடிய நிலையில், அமைந்தகரையில் நிதிநிறுவனம் நடத்தி வந்த ராஜேஷ் பிரித்வி, என்பவர்தான் இந்த பெண்ணை திருப்பூருக்கு கடத்தி உள்ளார் என்பது தெரியவந்தது.

இளம்பெண்
இந்த நிறுவனத்தில்தான் காணாமல் போன பெண் வேலை பார்த்திருக்கிறார். இதையடுத்து, ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டு, கோர்ட் மூலம் பெற்றோரிடமும் ஒப்படைத்தனர். ஆனால் ராஜேஷ் பிரித்ரி எஸ்கேப் ஆகியிருந்தார். கிட்டத்தட்ட ஒரு வாரகால தேடுதல் வேட்டைக்கு பிறகு ஓனர் ராஜேஷ் பிரித்வி சிக்கினார். இவருக்கு 29 வயசுதான் ஆகிறது.

எஸ்ஐ டிரஸ்
போலீசாரின் விசாரணையும் ஆரம்பமானது. அப்போது அவரிடம் போலீஸ் எஸ்.ஐ. யூனிபார்ம், போலி ஐடி கார்டு, உள்ளிட்டவற்றை கண்டு போலீசார் திடுக்கிட்டனர். அவ்வளவு எதற்கு கைவிலங்கு கூட ராஜேஷ் பிரித்வி வைத்திருந்திருக்கிறார்.

கல்யாண ஆசை
பிறகு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சொன்னதாவது: நொச்சிப்பாளையம்தான் என் சொந்த ஊர். 7ம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தபோது, பெண்களை ஏமாற்றி ஜாலியாக இருக்கலாம்ன்னு ஐடியா பண்ணினேன். அதனால அவர்களிடம் நெருங்கி பழங்கி கல்யாண ஆசை காட்டினேன்.. அவர்களை சீரழித்தேன்.. அப்பவும் என்னால சொகுசான வாழக்கை வாழ முடியல.

4 நாள் குடியிருப்பு
அதனால, பேஸ்புக்கில் போலீஸ் எஸ்ஐ. யூனிபார்ம் போட்டு என் போட்டோக்களை போட்டேன். அப்பதான் நிறைய பெண்கள் என்னிடம் நெருங்கி பேசினார்கள். அவர்களையும் ஏமாற்றி நாசம் செய்தேன். இதைதவிர, 'மேட்ரிமோனியல்' மூலமாகவும் கிடைத்த பெண்களை சீரழித்தேன். எல்லாரிடமும் கல்யாண ஆசைதான் காட்டுவேன்.. மொத்தம் 4 நாள் அவர்களுடன் குடியிருப்பேன். அப்பறம் ஜாலியா இருக்கும்போது எடுத்த வீடியோவை அவர்களிடம் காட்டியதுமே அரண்டு போய்விடுவர்கள். பிறகு மெல்ல எஸ்கேப் ஆயிடுவேன்.

24 பெண்கள்
இப்படி பெண்களை ஏமாற்றி, பணம் பறித்தே நிதிநிறுவனம் தொடங்கினேன். அதிலயும் மோசடி செய்து 30 லட்சம் ரூபாய்க்கு மேலே ஏமாற்றினேன். அங்கே வேலை செய்கிற பெண்களையும் ஏமாற்றி ஜாலியாக இருந்தேன். இப்படியே மொத்தம் 24 பெண்களை என் வீட்டுக்கு காரில் கடத்தி வந்து அவர்களை பாழ்படுத்தி உள்ளேன். ஸ்ரீராமகுரு, தீனதயாளன் என்று என் பெயர்களை சொல்லி 7 பெண்களை கல்யாணம் செய்துள்ளேன்" என்றார்.
இவர்மீது ஏற்கனவே திருச்சி, கோவை, திருப்பூர் ஆந்திரா என்று ஏராளமான ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ள நிலையில், தற்போது இவரை புழலில் அடைத்துள்ளனர் போலீசார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications