புயலா, மழையா.. என்னை ஒன்றும் செய்வதில்லை.. நாடு முழுவதும் நடக்கும் சுரேஷ் டானியல் !

சுற்றுசூழலை வலியுறுத்தி கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை இளைஞர் நடைபயணம் மேற்கொண்டார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழையா இருந்தால் என்ன, வெயிலா இருந்தால் எனக்கென்ன.. என் நோக்கம் நாடு முழுவதும் நடைபயணம் செய்தே சுற்றுசூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் என்பதை நடத்தி முடித்துள்ளார் சுரேஷ் டானியல்!!

மனித இனம் மட்டுமன்றி எல்லா உயிரினங்களும் சுற்றுச்சூழலை சார்ந்தே உயிர் வாழ்கின்றன. அதனால்தான் மனிதனையும் சுற்றுச்சூழலையும் ஒருபோதும் பிரிக்க முடிவதில்லை. சூழலியல் பண்பாடு கொண்ட நமது பாரம்பரிய அறிவை தொலைத்துவிட்டதால்தான் சுற்றுசூழலே புதைந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சுற்றுசூழல் குறித்த தாக்கத்தை நாட்டு மக்களிடையே விதைக்க புறப்பட்டவர்தான் சுரேஷ் டானியல் என்ற இளைஞர்.

Young Man walking for 7 months for Environmental Awareness

சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வுக்காகவே நடைபயணம் மேற்கொள்ள முடிவெடுத்தார் சுரேஷ். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயண எல்லையையும் இவர் நிர்ணயித்தார். அதன்படி கடந்த வரும் ஜூலை 27-ம் தேதி கன்னியாகுமரியில் விழிப்புணர்வு நடைபயணத்தை சுரேஷ் ஆரம்பிக்க, ஏராளமானோர் திரண்டு வந்து வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்தனர்.

அன்று தொடங்கிய நடைபயணம், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என்று நடந்தே சென்று, இன்று காஷ்மீர் மண்ணில் கால் வைத்துவிட்டார் சுரேஷ். ஒவ்வொரு நாளும் 20 முதல் 25 கிலோ மீட்டர் வரை நடந்து சென்று இந்த மாநிலங்களை கடந்திருக்கிறார். இன்று மாலை 6 மணிக்கு இந்த நடைபயணம் முற்று பெறுகிறது.

சுரேஷின் இந்த 7 மாத கால சுற்றுச்சூழல் குறித்த நடைபயணம் மிகப்பெரிய மாற்றத்தை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு, பகல் எத்தனை வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் 3800 கிமீ நடந்தே சென்று இன்று காஷ்மீர் எல்லையை தொட்ட சுரேஷ் டானியலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+