ராத்திரி ரவுண்ட்ஸ்.. திடீரென அவிழ்ந்த பானுவின் டிரஸ்.. என்னா கில்லாடித்தனம்.. ஷாக்கான போலீஸ்!

சென்னையில் செல்போன் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரவு நேரத்தில் கோயில் வளாகத்தில் சுற்றி கொண்டிருந்தார் பானு.. எதிர்பாராதவிதமாக அவரது உடை அவிந்துவிடவும்தான் பானுவின் மொத்த கேடித்தனமும் வெளிச்சத்துக்கு வந்தது.

சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட்டது. அந்த சமயத்தில், ஒரு பெண் அந்த பகுதியில் சுற்றி கொண்டே இருந்தார்.

அவர் கர்ப்பிணி போல தெரிந்தார்.. வயிறு பெரிதாக இருந்தது.. ஆனாலும் ரொம்ப நேரமாக அங்கேயே ரவுண்டு அடித்து கொண்டிருக்கவும், கோயிலுக்கு வந்த பெண் ஒருவருக்கு சந்தேகம் எழுந்தது.. இதை அங்கிருந்த ரோந்து போலீசாரிடம் சொன்னார்.

செல்போன்கள்

செல்போன்கள்

இதையடுத்து மப்டியில் இருந்த பெண் போலீசார் அந்த பெண்ணை விசாரிப்பதற்காக இழுத்து பிடித்தனர்.. அப்போது, திடீரென இடுப்பு பகுதியில் இருந்து சேலை அவிழ்ந்து.. ஏராளமான செல்போன்கள் கீழே விழுந்தன.. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், என்ன இதெல்லாம் என்று விசாரித்தனர். அப்போதுதான் அவை எல்லாமே திருட்டு செல்போன்கள் என்று தெரிந்தது.

அபேஸ்

அபேஸ்

இந்த பெண்ணின் பெயர் பானு.. 40 வயதாகிறது.. கல்பாக்கத்தை சேர்ந்தவர்.. ஓடும் பஸ்ஸில் திருடுவதுதான் இவர் ஸ்பெஷல்.. மற்ற திருட்டில் ஈடுபடும் பெண்கள், சக பெண்களிடம்தான் வேலையை காட்டுவார்கள்.. ஆனால் பானு, ஆண்களிடமே அபேஸ் பண்ணிவிடுவாராம்.

சிக்கி உள்ளார்

சிக்கி உள்ளார்

கோவில் திருவிழா கூட்டம் என்றால் பானுவுக்கு குஷியாம்.. இப்போது பானுவை கைது செய்த போலீசார் 5 செல்போன்கள் அவரிடமிருந்து மீட்டுள்ளனர்.. மடியில் கட்டியிருந்த அத்தனை செல்போன்களையும் விற்று காசாக்க முடிவு செய்திருந்தாராம்.. அப்போதுதான் போலீசில் சிக்கி உள்ளார்.

கைது

கைது

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் தீபத்தையொட்டி நிறைய கூட்டம் இருக்கும் என்பதால், திருட வந்ததாகவும், கோயிலில் செல்போன்களை ஈஸியாக திருடலாம் என்றும் சொல்லி போலீசாரை அதிர வைத்தார் பானு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+