கை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை
பெண்ணின் உடல் பாகங்களை குப்பை மேட்டில் போலீசார் கண்டெடுத்தனர்.
சென்னை: கைகள் தனியாக, கால்கள் தனியாக என கனக்கச்சிதமாக பார்சல் செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடலை குப்பை மேட்டில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர் மாநகராட்சி ஊழியர்கள்!!
பெருங்குடியில் மிகப்பெரிய குப்பை கிடங்கு உள்ளது. இங்குதான் பாதி சென்னையின் ஒட்டுமொத்த குப்பையும் கொட்டப்படும்.
இப்படி கோடம்பாக்கம் பகுதியிலிருந்து வந்து கொட்டப்பட்ட குப்பையில்தான் வித்தியாசமான பார்சல்கள் இருந்ததை மாநகராட்சி ஊழியர்கள் பார்த்து சந்தேகப்பட்டனர்.

துண்டாக பார்சல்
அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, அது பெண்ணின் உடல் என்பதும், கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பார்சலாகி வந்தது என்பதும். ஆனால் உடலை மட்டும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

பச்சை குத்தப்பட்டுள்ளது
விரைந்து வந்த போலீசாரும் இதுகுறித்து விசாரணையில் இறங்கினார். கொலை செய்யப்பட்ட பெண் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவரா? அல்லது வேறு பகுதியை சேர்ந்தவரா என உடடினயாக தெரியவில்லை. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 30 வயதிருக்கும் என கூறப்படுகிறது. அவரது கையில் 2 இடங்களில் டாட்டூ எனப்படும் பச்சை குத்தப்பட்டுள்ளது.

பலாத்காரம்
அதாவது வலது கையில் பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் படம் பச்சை குத்தப்பட்டுள்ளது. கால்களில் மெட்டி இருக்கிறது. வசதியான வீட்டு பெண்ணாக இருக்கலாம் என தெரிகிறது. பார்சலில் உடல் பாகங்கள் இருந்தாலும், நேற்று அல்லது நேற்று முன்தினம்தான் கொலை நடந்திருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் பலாத்காரம் செய்துதான் இந்த கொலை நடந்திருக்க நிறையவே வாய்ப்பு உள்ளதாக போலீசார் கருதுகிறார்கள்.

கைரேகைகள்
இப்போதைக்கு கால், கை மட்டும் கிடைத்துள்ளதால், கையிலுள்ள ரேகை எடுத்து பார்த்து, ஆதாருடன் பொருத்தி பார்த்தால்தான் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதும், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதும் தெரியவரும். அது சம்பந்தமான முயற்சியில் போலீசார் இறங்கி வருவதுடன், பெண்ணின் உடல் எங்கே உள்ளது என்றும் தேடி வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications