"என் அண்ணியின் அழகை பாரு" ஆபாச படத்தை செல்போனில் காட்டிய கணவர்.. தூக்கில் தொங்கிய புது மனைவி!
சென்னையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: "என் அண்ணியின் அழகை பாரு.. எங்களுக்கு நீதான் தடையா இருக்கே.." என்று சொல்லி அண்ணியின் ஆபாச படத்தை போலீஸ்கார கணவர் காட்டியதால், மனமுடைந்து இளம் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக புகார் ஒன்று எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் ஒதியடிகுப்பத்தை சேர்ந்தவர் அருள்.. 38 வயதாகிறது.. போலீசில் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வருகிறார்... பண்ருட்டியை சேர்ந்த ராஜேஸ்வரியுடன் இவருக்கு 4 மாசத்துக்கு முன்புதான் கல்யாணம் ஆனது.. ராஜேஸ்வரி வயது 30!

சென்னை மயிலாப்பூர் போலீஸ் குவார்ட்டஸில் குடியிருந்து வருகிறார்கள்.. இந்நிலையில், ராஜேஸ்வரி வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் இதை பற்றி போலீசாருக்கு தகவல் தந்தனர்.. ராஜேஸ்வரியின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்த போலீசார் இது சம்பந்தமான விசாரணையில் இறங்கினர்.
இந்த சமயத்தில், ராஜேஸ்வரியின் தம்பி சரவணன், பட்டினப்பாக்கம் போலீசில் புகார் ஒன்றை தந்துள்ளார். அந்த மனுவில், " என் அக்கா கடந்த 20-ந்தேதி என்னிடம் செல்போனில் பேசினார்.. அப்போது, கணவரும் அவரது அண்ணி வெண்ணிலாவும் 'நாங்கள் சந்தோஷமாக இருக்க நீதான் தடையாய் இருக்கிறே.. என் அண்ணி எவ்ளோ அழகா இருக்காங்க பாரு.. முதல்ல வீட்டை விட்டு வெளியே போ, அல்லது செத்து போய்ட்டால், எங்களுக்கே எல்லா சொத்தும் கிடைக்கும்" என்று தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அழுதார்.
மேலும் தன் அண்ணியின் அழகை காட்ட, செல்போனில் உள்ள ஆபாச படங்களையும் கணவர் காட்டுகிறார், தினமும் சித்ரவதை செய்கிறார் என்று அக்கா கூறினார். இதை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து அக்காவை பார்க்க ஊருக்கு வந்து கொண்டிருந்தோம்.. பாதி வழியிலேயே என் அக்கா இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது.. என் அக்காவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த புகார் உண்மையானதா என்ற விசாரணையில் பட்டினப்பாக்கம் போலீசார் இறங்கி உள்ளனர்... கல்யாணம் ஆகி 4 மாசத்தில் இளம்பெண் உயிரிழந்ததால் ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது!
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications