Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செருப்பால் அடிச்சிக்கிட்டார் முகிலன்.. புகார் தந்த பெண்.. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படலாமா.. மனைவி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Mugilan Pressmeet : மனநலம் சரியில்லயா?...முகிலன் சொல்லும் அதிர்ச்சி பதில்- வீடியோ

    சென்னை: "பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்.. தற்கொலைக்கு முயன்றேன்.. முகிலன் என்கிட்ட சமாதானம் செய்தார். காலில் கிடந்த செருப்பை எடுத்து அவரே அடிச்சிக்கிட்டார்...கல்யாணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார்" என்று முகிலன் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் கூறுகிறார்.

    முகிலன் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி அது சம்பந்தமான புகாரும் அளித்துள்ளார். இந்நிலையில், முகிலன் மீது குற்றம் சாட்டிய சம்பந்தப்பட்ட பெண்ணை சந்தித்து முகிலனுடன் என்னதான் நடந்தது என்று அவரிடமே பிரத்யேக பேட்டி எடுத்திருந்தது பிரபல நாளிதழ் நக்கீரன். அப்போது நக்கீரனுக்கு அந்த பெண் சொன்ன தகவல்கள்தான் இவை:

    "சக சமூக செயற்பாட்டாளர்கள் மூலமாகதான் எனக்கு அறிமுகமானார். ஒரு போராட்டத்துக்கு என்னை கூப்பிட்டார். அதன்பிறகு பல போராட்டங்களுக்கு என்னை கூப்பிடவும், தொடர்ந்து அதில் கலந்து கொண்டேன். இப்படித்தான் முகிலன் எனக்கு பழக்கமானார்.

    கல்யாணம்

    கல்யாணம்

    எனக்கு இப்படி ஒரு பாலியல் வன்கொடுமை நடந்த பிறகுதான் நான் தற்கொலை முயற்சிக்கு போனேன். ஆனால் முகிலன் என்னை சமாதானப்படுத்தி, திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். அப்போ நான் கேட்டேன், உங்களுக்குதான் திருமணம் ஆயிடுச்சே.. அது காதல் கல்யாணமா? அல்லது விருப்பப்பட்டு பண்ணீங்களா.. திரும்ப ஒரு கல்யாணம் எப்படி" என்று கேட்டேன்.

    அடிப்படை

    அடிப்படை

    அதற்கு அவர், காதல் கல்யாணம் எல்லாம் கிடையாது. நான் ஒரு பகுதியில் வேலை பார்த்துட்டு இருந்தப்போ, அவங்களுடைய பெற்றோர் என்னைபோல ஒரு தோழருக்கு பெண்ணை கல்யாணம் செய்ய முடிவு செய்ய விருப்பப்பட்டாங்க. அதன் அடிப்படையில்தான் கல்யாணம் ஆனது என்றார். உங்களுக்கு ஒரு பையன் இருக்காரே என்று கேட்டேன். அதற்கு "எங்களுக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கத்தான் விருப்பப்பட்டோம். ஆனால் கல்யாணமாகியும் குழந்தை இல்லைன்னா, அவங்களைதானே மலடின்னு சொல்வாங்க. அந்த ஒரு காரணத்துக்காகத்தான் குழந்தை என்ற விஷயத்தை சொன்னார்.

    செருப்பு

    செருப்பு

    அப்போது என்கிட்ட சமாதானம் செய்தார். காலில் கிடந்த செருப்பை எடுத்து அவரே அடிச்சிக்கிட்டார். கல்யாணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்பிறகு சிறை சென்றுவிட்டார். வெளியில் நடக்கும் விஷயங்களை நான் சிறையில் சென்று பார்த்து பேசிவிட்டு வருவேன். அப்போ நான் கேட்டேன், கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னீங்களே என்றதற்கு, ஒரு சில வேலைகள் இருக்கு, அதை முடிச்சிட்டு இதை பத்தி பேசுவோம் என்று சொன்னார்.

    ஆவண படம்

    ஆவண படம்

    ஆனா இந்த விஷயம் வெளியே தெரிய ஆரம்பிச்சிடுச்சு. அவருகிட்ட சிலர் கேட்க ஆரம்பிக்கவும், என்கிட்ட போன் பேசுறது, சந்திப்பதை தவிர்த்தும் வந்தார். பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை. இந்த சமயத்தில்தான் ஆவண படம் வெளியிடுவதாக பேசப்பட்டது. 15ம் தேதி 'ஆவண படம் வெளியிடப்படுவதாக சொல்லப்படும் இடத்தில் செய்தியாளர்களிடமே நான் போய் இதை சொல்ல போகிறேன்' என்று எங்கள் இருவரிடமும் சமாதானம் பேச முயற்சிப்பவர்களிடம் நான் சொன்னேன்.

    மெசேஜ்

    மெசேஜ்

    உடனே அவர்களும் முகிலனிடம் இதை சொல்லி, அந்த பொண்ணுக்கு ஒரு போனில் இருந்து மெசேஜ் அனுப்புங்க என்று தெரிவித்துள்ளனர். உடனே முகிலன் 17-ம்தேதி சந்திப்பதாக மெசேஜ் எனக்கு அனுப்பாமல், இன்னொருத்தருக்கு அனுப்பி உள்ளார். அந்த நபர் எனக்கு அதை அனுப்பி வைத்தார். அதனால் அந்த பிரஸ் மீட்டுக்கு நான் போகலை. இதன்பிறகுதான் கடத்தப்பட்டதாக, மாயமானதாக தகவல்கள் வர ஆரம்பித்தன. அப்போதுதான், என் விஷயமான பஞ்சாயத்துக்கு பயந்துதான் அவர் போயிட்டாரோ என்ற கேள்விகளை ஒருசிலர் எழுப்பினார்கள். பெண் விஷயத்தினால்தான் முகிலன் போய்விட்டார் என்று பரவி, நிறைய பேர் என்னை நோக்கி கேள்விகளை முன் வைத்தார்கள்.

    தமிழக அரசு

    தமிழக அரசு

    முகிலன் காணாமல் போனபிறகுதான் இந்த பொண்ணு இப்படி சொல்கிறார் என்று என்னை சொன்னார்கள். காணாமல் போனதற்கு முன்னேயே இப்படியெல்லாம் நடந்தது. ஆனால் ஸ்டெர்லைட் ஆளுங்க கிட்ட காசு வாங்கிட்டேன், காவல்துறைக்கு காசு வாங்கிட்டேன்.. தமிழக அரசுடன் இணைந்து செயல்படறேன், இப்படியெல்லாம் என்னை பத்தி சொல்றாங்க.

    பேசகூடாதா?

    பேசகூடாதா?

    ஒரு தனி மனிதருக்காக இத்தனை அவதூறுகளை நான் வாங்கிக்கணும்னு அவசியம் இல்லை. அப்போதான் என்னோட விஷயத்தை பேச ஆரம்பிச்சேன். உடனே இதை நான் பேசவே கூடாது என்று சில அமைப்புகள், சில ஊடகங்கள் சொன்னார்கள். என்னை பொறுத்தவரை என் விஷயமாக கூட அவர் போயிருக்கலாம். அப்போ நடந்தது ஏன் இப்போ வந்து சொல்றீங்கன்னு சொல்றாங்க. ஒரு பெண்ணை பார்த்துதான் கேள்வி எழுப்பப்படுகிறதே, தவிர அந்த ஆணை பார்த்து கேள்வி எழுப்புவது இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    பூங்கொடி

    பூங்கொடி

    ஆனால் இந்த குற்றச்சாட்டை முகிலனின் மனைவி பூங்கொடி மறுத்துள்ளார். "அந்த பெண் படித்தவர், பட்டதாரி. முகிலனுக்கு மனைவி, மகன் இருப்பது தெரியும், சட்டப்படி இது செல்லாது என்றும் தெரியும், கல்யாணம் பண்ணிக்கிறதா முகிலனே சொல்லி இருந்தாலும்கூட, இது சட்டத்துக்கு புறம்பானது என்று அந்த பெண் யோசிக்க வேணாமா, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படலாமா" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    போராளிகள்

    போராளிகள்

    அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படறதுதானே இது? சட்டத்துக்கு புறம்பாகத்தானே இது இருக்கு? அடுத்தவங்களுக்கு உரிமையானவங்க மேல ஆசைப்படலாமா? இதெல்லாம் அந்த பெண்ணுக்கு தெரியாதா? போராட்ட களத்துல போராளிகள் எங்க வேணும்னாலும் போவாங்க, தங்குவாங்க, வருவாங்க.

    நிரூபிக்கட்டும்

    நிரூபிக்கட்டும்

    இந்த அம்மா தனி ஆள் கிடையாது. போராளிதான்.. அப்படின்னு சொல்லிக்கிறாங்க. என்ன நடந்ததுன்னு முகிலனுக்கும், அந்த அம்மாவுக்கும் மட்டும்தான் தெரியும். பாலியல் வழக்கு குடுத்திருக்காங்க. வெறும் வழக்குதான். விசாரிச்சு குற்றவாளிதான்னு இன்னும் நிரூபிக்கல. சந்திப்போம்.. குற்றம் நிரூபிக்கப்பட்டால் பார்ப்போம். ஆனால் அவர் இப்படி செய்திருக்கவே மாட்டார்" என்று உறுதியாக சொன்னார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+