சினிமாவில் நடிக்க ஆசை.. சப்பாத்தியை காட்டி கடத்தினோம்.. 60 லட்சம் கேட்டு சிக்கிய அம்பிகா
குழந்தையை கடத்திய அம்பிகா போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்
Recommended Video
சென்னை: "சப்பாத்தின்னா குழந்தைக்கு ரொம்ப பிடிக்கும். அதனால ஹோட்டல்ல சப்பாத்தி சாப்பிடலாமான்னு கேட்டேன். குழந்தையும் பலமா தலையாட்டியது. இப்படித்தான் குழந்தையை கடத்தினோம்" என்று வேலைக்கார பெண் அம்பிகா வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை அமைந்தகரை, செனாய் நகர், செல்லம்மாள் தெருவில் வசிப்பவர் அருள்ராஜ். இவரது மனைவி நந்தினி. இவர் தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு மூன்றரை வயசில் பெண் குழந்தை உள்ளது. சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறாள் குழந்தை.

குழந்தை
இந்த குழந்தையை கவனிப்பதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண்தான் அம்பிகா. வயசு 29. குழந்தையை டெய்லி ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய்ட்டு, திரும்பவும் மதியம் அழைத்து வருவதுதான் இவரது வேலை. நேற்றுமுன்தினம் வழக்கம்போல் பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்து வரச்சென்ற அம்பிகாவை காணோம். குழந்தையுடன் டாடா சுமோ காரில் கடத்தப்பட்டார்.

60 லட்சம்
குழந்தை உயிரோடு வேணும்னா 60 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டினர். விஷயம் போலீசுக்கு போனது... இது தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டது. வெறும் 6 மணி நேரம்தான்.. அம்பிகா அகப்பட்டு கொண்டார். கோவளத்தில் குழந்தையுடன் பதுங்கி இருந்த அம்பிகாவை அவர் காதலன் கலிமுல்லாவுடன் சேர்த்து கைது செய்தனர் போலீசார்.

சப்பாத்தி
பின்னர் போலீசாரிடம் அம்பிகா அளித்த வாக்குமூலத்தில், "சப்பாத்தின்னா குழந்தைக்கு ரொம்ப பிடிக்கும். அதனால ஹோட்டல்ல சப்பாத்தி சாப்பிடலாமான்னு கேட்டேன். குழந்தையும் பலமா தலையாட்டியது. அப்படியே காரில் கடத்திவிட்டோம். குழந்தையுடன் எங்களை கோவளத்தில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்துவிட்டு, திரும்பவும் செங்குன்றம் சென்றார்.

சொந்த படம்
ஒரு கடத்தலை எப்படி செய்யலாம் என்று என் காதலன் கலிமுல்லா யுடியூப் பார்த்துதான் கற்று கொண்டார். அவர் ஓ காதலனே என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படம் சரியா ஓடலை. அதனால் சொந்த படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணோம். எனக்கும் சினிமாவில் நடிக்க ரொம்ப ஆசை. அதனால்தான் பணத்துக்காக இப்படி செய்தோம்" என்றார்.

சண்டை
இதில் ஹைலைட் என்னவென்றால், ரெண்டு பேருமே கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் இருந்தனர். அப்போது, உன்னால்தான் இப்படி ஆயிடுச்சு, இல்லை உன்னால்தான் இப்படி ஆயிடுச்சு என்று ரெண்டு பேரும் போலீசார் முன்னாடியே மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டனராம்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications