Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயா ஹேப்பி அண்ணாச்சி.. கோயில் வாசலில் மகன் பிறந்ததால் பூரிப்பு.. அத்தி வரதர் என்றும் பெயர் சூட்டல்

தரிசனத்தில் பிறந்த குழந்தைக்கு அத்திவரதர் பெயர் சூட்டப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்படி ஒரு பெயரை எத்தனை நபர்கள் வைத்திருப்பார்களோ என்று தெரியாது. ஆனால் அத்திவரதர் கோயில் வாசலில் பிறந்த குழந்தைக்கு 'அத்திவரதர்' என்றே பெயரிட்டு உள்ளார் தாய் விஜயா.

காஞ்சிபுரத்தில் நடைபெறும் அத்திவரதர் வைபவம் நிறைவு கட்டத்தில் உள்ளது. அதனால் பக்தர்கள் கூட்டம் முண்டியடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை, வேலூர் மாவட்டம் பாணாவரம் பகுதியைச் சேர்ந்த விஜயா என்ற கர்ப்பிணி பெண் அத்திவரதரை தரிசிக்க வந்திருந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான இவர், கூட்ட நெரிசலிலும் கஷ்டப்பட்டு வந்துஅத்திவரதரையும் தரிசித்து விட்டு வெளியே வந்தார். மணி 10.00 இருக்கும்... கோயில் வளாகத்திலேயே விஜயாவுக்கு திடீரென பிரசவ வலி வந்துவிட்டது.

முகாம்

முகாம்

இதனால் அங்கிருந்த பெண் பக்தர்கள் அவரை கைத்தாங்கலாக பதினாறு கால் மண்டபம் அருகே உள்ள மருத்துவ முகாமுக்கு அழைத்து வந்து பிரசவம் பார்த்தனர். சில நிமிடங்களிலேயே 3 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது.

விஜயா

விஜயா

அத்திவரதரை தரிசனம் செய்ததும், அழகான ஆண் குழந்தையும் பிறந்ததால் விஜயா டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார். காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்மூலம் அழைத்து செல்லப்பட்டனர். இப்போது தாயும், சேயும் சௌக்கியமாக இருக்கிறார்களாம்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இப்போது கூடுதல் செய்தி என்னவென்றால், பிறந்த குழந்தைக்கு ‘அத்திவரதர்' என்று பெயரிட்டு உள்ளார்களாம். விஜயா என்ற பெண்ணின் முகம் யாருக்கும் தெரியாவிட்டாலும், குழந்தை பிறந்த செய்தி கோயில் முழுக்க பரவிவிட்டது. இதனால் தரிசனத்துக்கு வந்திருந்த பக்தர்கள் எல்லாம் நேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

பக்தர்கள்

பக்தர்கள்

தரிசனத்துக்கு வந்த நேரம் குழந்தை பிறந்ததால், அத்தி வரதர் என்று பெயர் வைக்கும்படி ஏராளமான பக்தர்கள் விஜயா தம்பதியிடம் கேட்டுக்கொண்டார்களாம். 40 வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் இந்த விழாவில் விஜயாவுக்கு குழந்தை பிறந்திருப்பது அரிய நிகழ்வு என்றே பக்தர்கள் கருதுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+