தடைக்கல்லை படிக்கல்லாக மாற்றிய சிம்பு.. லாங் பிரேக்கிற்கு பிறகு வேற லெவல் பயணம்!.. அஸ்வின் அலசல்!
சென்னை: ஈஸ்வரன் படம் சிம்புவின் கம் பேக் இல்லை. இது அவரது அடுத்த லெவல் பயணம் என இளம் எழுத்தாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இளம் எழுத்தாளர் அஸ்வின் தனது டேக் 1 டேக் 2 டேக் 3 யூடியூப் சேனலில் கூறுகையில் படம் நடித்தாலும் சரி, திரையில் தோன்றினாலும் சரி, நடிக்காவிட்டாலும் சரி சிம்புவுக்கான ரசிகர் பட்டாளம் இன்னும் குறையவே இல்லை.
இந்த பாக்கியம் எல்லாரும் கிடைக்காது. சிம்புவுக்கு முக்கிய ஆதரவே அவருடைய ரசிகர்கள்தான். சிம்பு தான் பிரேக் எடுத்த காலத்திலும் சும்மா இருந்துவிடவில்லை. சினிமாக்களில் கெஸ்ட் ரோல் செய்தார், பாடல்களுக்கு மியூசிக் போட்டார், சமூக சேவைகளை செய்து கொண்டிருந்தார்.

விஜய்
எம்ஜிஆர் சிவாஜி, விஜய் அஜித் மாதிரி ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த இரு நடிகர்கள் என்றால் அதில் சிம்புவும்- தனுஷையும் சொல்லலாம். எந்த குழந்தை நட்சத்திரத்திற்கும் இல்லாத வகையில் இவருக்கு என தனிப்பாடலும் இடம்பெற்றிருந்தது. ஐயாம் ஏ லிட்டில் ஸ்டார்....... என்ற பாடலில் நடனம் ஆடியிருப்பார்.
காதல் படம்
சின்ன வயதிலேயே தனக்கு இருக்கும் திறமையை மிகவும் நன்றாக பயன்படுத்தினார். இதன் விளைவு சொன்னால்தான் காதலா படத்தில் சிம்புவின் நடனத்தை பார்த்து அனைவரும் மிரண்டு போய்விட்டார்கள். எல்லார் வாழ்விலும் நடப்பதை போல சிம்புவின் வாழ்விலும் சில போராட்டங்கள் வந்தன. சிம்பு எப்போதும் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவார் என்பார்கள்.

தலையீடு
அவர் கதை டிஸ்கஷனில் நிறைய தலையிடுவார் என்பார்கள். அது போல் இயக்குநர் சொல்லும் கதையை தனக்கு ஏற்ற மாதிரி மாற்றுவார் என்றும் சொல்வார்கள். ஆனால் இந்த குறைகளை அவர் ஈஸ்வரன் படத்தில் நிவர்த்தி செய்துவிட்டார். கம் பேக் திரைப்படம் என்றாலும் ஒரே மாதத்தில் ஒரு திரைப்படத்தை முடித்திருக்கிறார் என்றால் அதற்கு சுசீந்திரனை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

ஜிம் பயிற்சியாளர்கள்
சிம்புவை வைத்து எப்படி ஒரே மாதத்தில் முடித்தார் என்பதுதான் அனைவருக்கும் ஆச்சரியம். எல்லாம் தானாக நடந்தது என சுசீந்திரன் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார். அவரது உடல் எடை குறைந்தது குறித்து ஜிம் பயிற்சியாளர்கள் கூறுகையில், அனைவருக்கும் உடல் எடையை குறைக்க ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.

சபரிமலை
ஆனால் இவர் மனதில் என்ன வைத்து கொண்டார் என்றால் இவர்கள் யார் என்னை பற்றி சொல்வதற்கு, நான் எப்படி இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும் என்பதே அவரது மைன்ட் வாய்ஸ்ஸாக இருந்திருக்கும். அதனால்தான் உடனடியாக இப்படி மாற்றத்தை சிம்புவிடம் பார்க்க முடிகிறது என்றார்கள். சபரிமலைக்கு போய்ட்டு வந்ததிலிருந்தே ஏதாவது செய்ய வேண்டும் என இவரது மனதில் இருந்துள்ளது. அதை இவர் சிறப்பாக செயல்படுத்திவிட்டார்.

இசை வெளியீட்டு விழா
சிம்பு 4 படங்களில் நடிக்கிறார். அதில் சுசீந்திரன் படங்கள் மட்டும் 2 நடிக்கிறார். ஒன்று ஈஸ்வரன் திரைக்கு வரவிருக்கிறது. இரண்டாவது படம் குறித்து இசை வெளியீட்டு விழாவிலேயே சுசீந்திரன் அறிவித்துவிட்டார். அந்த படம் தீபாவளிக்கு வரவிருக்கிறது. அவர் நிறைய படங்களில் நடித்துள்ளார். ஆனால் பல படங்கள் அவருக்கு தோல்வியாகவே முடிந்தது.

எதிர்மறை
சிம்புவிடம் எதெல்லாம் எதிர்மறையாக இருக்கிறது என பலர் விமர்சித்தார்களோ அதையே அவர் நேர்மறையாக மாற்றிவிட்டார். பிரேக் எடுப்பது என்பது எப்போதுமே நல்ல விஷயம்தான். நமது மைண்ட் ரிலாக்ஸ் ஆகும். அடுத்த நகர்வுக்கு தயார்படுத்திக் கொள்ள உதவும். சிம்புவின் ஈஸ்வரன் படம் கம்பேக் அல்ல, அடுத்த லெவல் பயணம்.

ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழா
நிறைய காதல் படங்களில் நடித்துவிட்டார், ஆக்ஷன் படங்களையும் செய்துவிட்டார். இசை அமைத்துள்ளார். எனவே இந்த முறை ஈஸ்வரன் படம் வேற லெவலில் இருக்கும். அவர் இசை வெளியீட்டு விழாக்களில் எப்போதும் அதிகமாகவே பேசுவார். ஆனால் ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவில் அவர் குறைவாக பேசினார். இதற்கு பதிலையும் அவரே கூறிவிட்டார், இனி பேச்சே கிடையாது, செயல்தான் என்றார். தனக்கு ஏற்பட்ட அனைத்து தடைக்கற்களையும் அவர் படிக்கற்களாக மாற்றி உயர்ந்து கொண்டே செல்கிறார். இதனால் சிம்பு தற்போது அடுத்த லெவலுக்கான பயணத்தை தொடங்கிவிட்டார் என்றே நான் கருதுகிறேன் என அஸ்வின் தனது கருத்துகளை முன்வைத்தார்.
இளம் எழுத்தாளர் அஸ்வினின் பேச்சை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாராட்டி ரீட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications