Personality test: பன் கொண்டை போடும் பெண்களா நீங்கள்! அப்போ உங்கள் குணங்கள் இதுதானா பாருங்கள்!
சென்னை: பொதுவாக முகத்தை பார்த்துத்தானே ஒருவரின் குணாதிசயங்களை சொல்ல முடியும். ஆனால் நாங்கள் அவர்களின் தலை முடியின் ஸ்டைலை வைத்தே சொல்லிவிடுவோமே.
ஒருவரின் குணாதிசயத்தை அறிய அவர்களுடைய ஜாதகங்கள், பிறந்த தேதி, நட்சத்திரம் உள்ளிட்டவைகளை வைத்து கணித்து வருகிறோம். ஆனால் எல்லாரும் ஜாதகத்தை வைத்திருப்பார்களா, பிறந்த தேதியை குறித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

இதனால் அண்மைக்காலமாக ஆளுமைத் திறன், தனித்துவமான திறன் என்ற பெயரில் ஏராளமான விஷயங்கள் இணையத்தில் வலம் வருகின்றன. கால் விரல்கள், உட்காரும் நிலை, கை விரல்கள், மூக்கு, மச்சம் உள்ளிட்டவைகளை வைத்து அந்த நபரின் கேரக்டர்கள் சொல்லப்படுகின்றன (இதை நம்புவதும் நம்பாததும் அவரவரின் எண்ணங்களை பொறுத்தது).
அந்த வகையில் நாம் இன்று பார்ப்பது பெண்களுக்கான சிகை அலங்காரத்தை பற்றியதுதான். மொத்தம் இரு சிகை அலங்காரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று பன் ஸ்டைல் கொண்டை, இன்னொன்று குதிரை வால் என சொல்லப்படும் போனி டெய்ல்! முடியில் எப்படி குணாதிசயத்தை சொல்ல முடியும் என கேட்கிறீர்களா?
நிச்சயம் சொல்லலாம்! அந்த காலங்களில் முடி சுருட்டை இருந்தால் பெரியவர்கள் தலை வாரி விடும் போது "நீ அடங்கினா தானே உன் முடி அடங்கும்" என்பார்கள். அப்போ சுருட்டை முடி இருந்தாலே அவர்கள் அடங்க மாட்டார்களா என்றெல்லாம் சொல்ல முடியாது. பழமொழியை அனுபவிக்க வேண்டும். ஆராய கூடாது! நோ கிராஸ் கொஸ்டீன்!
பன் கொண்டை: சரி விஷயத்திற்கு வருவோம்- முதல் வகையான பன் கொண்டை போடும் பெண்களாக இருந்தால் நீங்கள் திறமையானவர்கள், எல்லா பணிகளையும் நல்ல ஏற்பாடுகளுடன் செய்வீர்கள். நீங்கள் தொழில் துறை வல்லுநர்களாக இருப்பீர்கள். உங்களது அணுகுமுறையிலேயே இலக்குகளும் அடங்கியிருக்கும்.
உங்கள் சாதனைகளில் பெருமிதம் கொள்வோராக இருப்பீர்கள் (அதில் தவறில்லையே). அது போல் நம்பகத்தன்மையுடன் இருப்பீர்கள். எல்லாவற்றிற்கு மேல் நேர பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். கடின உழைப்பை செய்ய எப்போதுமே தயங்க மாட்டீர்கள். எப்போதும் இலக்குகளுடனேயே பயணிப்பீர்கள்.
இந்த அர்ப்பணிப்புதான் உங்களை வாழ்க்கையில் உயர்த்தும். கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்யலாம், ஏதாவது ஒரு விஷயத்தை என்ஜாய் செய்யலாம் என நினைத்தால் அது உங்களுக்கு அத்தனை எளிதில் கிடைத்துவிடாது. இதற்காக நீங்கள் போராட வேண்டியது அவசியமாக இருக்கிறது.
போனி டெய்ல்: அது போல் அடுத்த சிகை அலங்காரம்- குதிரை வால்- ஆளுமை பண்புகளுடன் இருப்பீர்கள். மிகவும் அழகான தோற்றத்துடன் இருப்பதால் உங்கள் அழகு, வசீகரம் மற்றவர்களை கவரும்.எந்த ஆர்ப்பாட்டமின்றி அமைதியான நம்பிக்கையுடனும் திறமையுடனும் எப்போதும் நீங்கள் தனித்தே நிற்கிறீர்கள்.
ஓவியம் வரைதல், படித்தல், வானத்தை அன்னார்ந்து பார்த்தல் போன்றவற்றில் கிடைக்கும் இன்பங்கள் உங்களுக்கு பிடிக்கும். புதிய நபர்களை சந்திக்க விரும்பீர்கள், அதன் மூலம் புதிய அனுபவங்களை பெறுவது உங்களுக்கு பிடிக்கும். ஊக்கமளிக்கும் பேச்சாளர், எத்தனை பெரிய கூட்டம் இருந்தாலும் நீங்கள் பேசினால் அந்த கூட்டமே உங்கள் பேச்சை கவனிக்கும்.
நீங்கள் மிக உயரத்தில் அணிந்திருக்கும் குதிரை வாலை போல் உங்கள் திறமையும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். இருப்பினும் இந்த வகையான குதிரை வால் அலங்காரம், சிலரது பலவீனங்களையும் குறித்தும். பார்ப்பதற்கு நீங்கள் ஆக்ரோஷமானவரான தோற்றத்தை பிறருக்கு ஏற்படுத்தலாம். இப்படியாக இரு வகையான ஹேர் ஸ்டைல்களை வைத்து உங்கள் திறமைகளை நாங்கள் சொல்லியுள்ளோம். உண்மையாக இருந்தால் கமென்ட் செய்யுங்கள். இந்த ஹேர் ஸ்டைலுடன் நீங்கள் பார்த்தவர்களின் குணாதிசயங்களையும் கமென்டில் பகிருங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications