15 வயது சிறுமி.. இன்ஸ்டாகிராமில் போலி ஐடி மூலம் ஆபாச பதிவு போட்ட இளைஞர்.. போக்சோவில் கைது
15 வயது சிறுமியை ஏமாற்றிய இளைஞர் போக்சோவில் கைதானார்
சென்னை: இன்ஸ்டாகிராமில் 15 வயது சிறுமியின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி ஐடி தொடங்கிய நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த பெண் அவர்.. கணவனை இழந்தவர்.. இவருக்கு 2 பெண்கள் உண்டு.. 2 மகள்களையும் வீட்டு வேலை செய்து படிக்க வைத்து வருகிறார்.
இதில் ஒரு மகளுக்கு 15 வயதாகிறது.. அவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து போலியாக ஐடி கணக்கை சிலர் துவங்கி உள்ளார்.. மேலும் அந்த பெண்ணை பற்றி அவதூறு செயல்களிலும் அந்த மர்ம நபர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

தாய்
இந்த விஷயம் தெரிந்ததும், அதிர்ச்சியடைந்த தாய், தண்டையார்பேட்டை மகளிர் போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டை போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு, மர்மநபர்கள் குறித்த விவரங்களை தேடி வந்தனர்.. இறுதியில், மணலிபுதுநகர் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்ற வாலிபர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது..

சிறை
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.. அத்துடன், போக்சோ சட்டத்தில் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலும் அடைத்தனர். பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு தந்தால் மட்டும் போக்சோ சட்டம் பாய்வதில்லை.. இதுபோன்ற கிரிமினல் வேலைகளை செய்து அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினாலும் போக்சோ சட்டம் பாயும் என்பதுதான் மேற்கண்ட வழக்கு தெரியப்படுத்துகிறது..

டெல்லி
இப்படித்தான், கடந்த வாரம்கூட, டெல்லியில் ஒரு சம்பவம் நடந்தது.. ஒரு பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இளைஞர் ஒருவர் ஹேக் செய்துவிட்டு, போலியாக உருவாக்கப்பட்ட ஐடியில் பெண்ணின் நிர்வாணப் படங்களை வெளியிட போவதாக மிரட்டி உள்ளார்.. அந்த மிரட்டல் விடுத்த மெசேஜ் போலீசில் தெரிவித்துள்ளார் சம்பந்தப்பட்ட பெண்.. இறுதியில் அந்த இளைஞர் ஒரே நாளில் கைதாகினார்..

இளம்பெண்கள்
பெண்களுக்கு சட்டம் சாதகமாக இருந்தாலும்கூட, சமீபகாலமாக, சோஷியல் மீடியாவில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்ற நிலைமை வந்துவிட்டது.. ஒரு ஆப் இருக்கிறதென்றால், அதில் ஒரு கணக்கு தொடங்குபவர், தன்னுடைய கணக்கு மட்டுமல்லாமல் தனது பெயர்களை மாற்றி, பாலினத்தையும் மாற்றி, வேறு ஒரு போலியான கணக்குகளையும் தொடங்கி, அதன் மூலம் பல்வேறு ஏமாற்று காரியங்களையும் செய்து வருவது பெருகி கொண்டிருப்பதால், இளம்பெண்கள் உஷாராக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications