நிலம் வாங்கித் தருவதாக ரூ 1.89 கோடி பண மோசடி.. பசங்க இயக்குநர் பாண்டிராஜ் புகார்.. இளைஞர் கைது
சென்னை: நிலம் வாங்கி தருவதாக கூறி இயக்குநர் பாண்டிராஜிடம் ரூ 1.89 கோடி பணத்தை பெற்ற இளைஞர் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் இயக்குநராக முதல்முறையாக அறியப்பட்டவர் பாண்டிராஜ். அவரது முதல் படத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைத்தன. அருள்நிதியின் வம்சம் படத்தை இயக்கியுள்ளார்.

அது போல் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். பாண்டிராஜ் தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
இவர் தன்னிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி குமார் என்பவர் ரூ 1.89 கோடி மோசடி செய்துள்ளதாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் ஒரு மனுவை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்தவர் குமார். இவருக்கு வெள்ளனூர் கிராமத்தில் உள்ள 1 ஏக்கர் 43 சென்ட் பரப்பளவில் நிலம் உள்ளது.
அந்த நிலத்தில் 27 சென்ட் நிலத்தை எனக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு விற்பனை செய்வதாக தெரிவித்தார். இதற்காக முதலில் ரூ 40 லட்சத்தை பெற்றார். பின்னர் அதே பட்டா எண் கொண்ட நிலத்தின் மற்றொரு பகுதியில் இருந்து 54 சென்ட் நிலத்தையும் தன்னிடம் விற்பனை செய்வதாக தெரிவித்தார். அதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு 12 லட்சம் ரூபாய் முன் தொகை கொடுத்தேன். ஆனால் அந்த 2 நிலங்களையும் எனது பெயருக்கு அவர் பதிவு செய்து தரவில்லை.
கடந்த 2017 ஆம் ஆண்டு வீட்டு வேலைக்காக குமார், என்னிடம் 3 லட்சம் கடன வாங்கியிருந்தார். இதையடுத்து காரைக்குடியில் துணிக் கடை ஆரம்பிக்க வேண்டும் என கூறி 4.50 லட்சம் பணத்தையும் வாங்கினார். அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 39 ஆவது வார்டில் 69,840 சதுர அடி கொண்ட வீட்டு மனை பட்டா அவரிடம் இருப்பதாக தெரிவித்தார்.
அதை எனக்கு எழுதி தருவதாக கூறினார். இதற்காக இரு தவணைகளாக ஒரு கோடி ரூபாய் பெற்றுள்ளார். இதே போல் 5 தவணைகளாக என்னிடம் நிலம் விற்பனை செய்வதாக குமார் மொத்தம் ரூ 1 கோடி 89 லட்சத்து 59 ஆயிரம் பெற்றுக் கொண்டு நிலத்தை எனது பெயருக்கு பத்திரப் பதிவு செய்யாமல் மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications