டாஸ்மாக் கடை திறக்காத நேரத்தில் ‘சரக்கு டோர் டெலிவரி’.. காசிமேடு இளைஞரை பொறி வைத்து பிடித்த போலீசார்
சென்னை: சென்னை காசிமேடு பகுதியில் டாஸ்மாக் கடைகள் செயல்படாத நேரத்தில் மது பாட்டில்களை குடிமகன்களுக்கு டோர் டெலிவரி செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகரங்களில் காய்கறிகள், உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்கள் ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க நேரம் இல்லாதவர்களை மையப்படுத்தி டோர் டெலிவரி செய்யும் சேவையில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வரிசையில் குடிமகன்களின் நீண்ட நாளைய ஏக்கங்களில் ஒன்று மதுபானங்களை டோர் டெலிவரி செய்யும் முறை. கொரோனா காலத்தில் அதிக அளவில் உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறி மருந்து பொருட்களை பெற இந்த சேவை பெரிய அளவில் கைகொடுத்தது.
உணவு மற்றும் மருந்துப் பொருட்களைப் போல மதுபானத்தையும் டோர் டெலிவரி செய்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என பலர் கருத்து கூறி வந்தனர். அதற்கான முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பெரும்பாலான மாநிலங்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், சென்னை காசிமேடு ஏரியாவில் மதுபான டோல் டெலிவரி சேவையில் இளைஞர் ஒருவர் ஈடுபட்டு வந்துள்ளார். சென்னை காசிமேடு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படாத நேரத்தில், மதுபான பாட்டில்களை டோர் டெலிவரி செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போன் மூலமாக ஜோசப்பிடம் மதுபானம் ஆர்டர் செய்த போலீசார், அபர் மது பாட்டில்களை டெலிவரி செய்ய வரும்போது அவரை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். கைதான ஜோசப்பிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் காசிமேடு ஏரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூ.10375 தான் சம்பளம்: டாஸ்மாக் ஊழியர் அமைச்சர் முஸ்தபாவிடம் பேசிய வீடியோ.. எதார்த்தம் என்ன -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications