இணையத்தில் பரவிய ராஜா ராணி 2 நடிகை பிரவீனா ஆபாச படங்கள்.. மார்பிங் செய்து வெளியிட்ட இளைஞர் கைது
சென்னை: ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோவின் தாயாக நடித்து வருகிறார் பிரவீனா மற்றும் அவரது மகளின் புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடப்பட்ட விவகாரத்தில் போலீசார், பாக்யராஜ் என்ற இளைஞரைக் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீனா. இவர் மலையாளத்தில் பல டிவி சீரியல்களில் நடித்துள்ளார். தமிழில் இப்போது வெற்றிகரமாக ஓடிவரும் ராஜா ராணி 2 சீரியலிலும் நடித்து வருகிறார்.
ராஜா ராணி 2இல் ஹீரோவின் தாயாக நடித்து வருகிறார் பிரவீனா. இந்த சீரியலில் நடித்த பிறகு தமிழ்நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்துவிட்டனர் என்றே சொல்லலாம்.

ஆபாசமாக மார்பிங்
சீரியல் மட்டுமின்றி திரைப்படங்களிலும் இவர் படித்துள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று, கோமாளி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். அடுத்து தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள வாத்தி திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படி படுபிஸியாக உள்ள பிரவீனா, கடந்தாண்டு சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதாவது, சிலர் தனது ஃபோட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவதாகப் புகார் அளித்தார்.

ஏற்கனவே கைது
இப்படி ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் கடந்தாண்டு புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், நாக்பூரை சேர்ந்த பாக்யராஜ் என்பவரை டெல்லியில் வைத்து கைது செய்தனர். இந்த புகார் அவர் சில மாதங்கள் சிறையில் இருந்த போதிலும், சீக்கிரமே ஜாமீவில் வெளியே வந்துவிட்டதாகத் தெரிகிறது.

மீண்டும் ஆபாச மார்பிங்
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிரவீனா மட்டுமின்றி அவரது மகளின் புகைப்படங்களையும் ஆபாசமாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் போலியான ஐடிக்களில் மீண்டும் புகைப்படங்கள் வெளியானது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பாக பிரவீனா தனது மகளுடன் சென்று கேரள சைபர் கிரைமில் மீண்டும் புகார் அளித்தார். சம்மந்தப்பட்ட நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பழிவாங்கும் நோக்கில்
ஜெயிலில் இருந்து வெளிவந்த அந்த நபர் (பாக்யராஜ்) தன்னை பழிவாங்கும் நோக்கத்துடன் தன் மகளின் ஃபோட்டோக்களை கூட விடாமல் மார்பிங் செய்து பலருக்கும் அனுப்பி வைத்து வருவதாகத் தெரிவித்தனர். மேலும், பல நூறு போலிக் கணக்குகளைத் தொடங்கி, அதில் தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைது
இந்தளவுக்கு வக்கிரம் பிடித்த ஒருவரை யாராவது பார்க்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த விவகாரத்தில் போலீசார், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை பிரவீனா மற்றும் அவரது மகளின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து வெளியிட்ட பாக்யராஜ் என்பவரைக் கைது செய்துள்ளனர். 22 வயதே ஆன பாக்யராஜ் கல்லூரி மாணவன் என்றும் கூறப்படுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications