கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை.. சென்னையில் ஷாக்.. போலீஸ் தீவிர விசாரணை
சென்னை: சென்னையில் கிண்டி அருகே உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தின் மீது இருந்து இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பரங்கிமலை போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அங்குச் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
சென்னையில் நகரின் உள்ள மிக முக்கிய மேம்பாலங்களில் ஒன்று கத்திப்பாரா மேம்பாலம்.. கிண்டியில் உள்ள இந்த கத்திப்பாரா மேம்பாலம் தான் ஆசியாவின் மிகப் பெரிய க்ளோவர் இலை வடிவ மேம்பாலமாக இருக்கிறது.

இந்த பகுதியில் நிலவும் டிராபிக் நெரிசலைக் குறைத்ததில் கத்திப்பாரா மேம்பாலத்திற்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த பாலத்தில் நள்ளிரவிலும் கூட வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.
இளைஞர்: இதற்கிடையே இன்று காலை இந்த மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. அந்த இளைஞர் வடபழனி செல்லும் சாலையிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கத்திப்பாரா மேம்பாலத்தில் போரூர் வழியாகச் செல்லும் வளைவில் அவர் தனது டூவிலரை நிறுத்தியுள்ளார்.
தற்கொலை: திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். மேம்பாலத்தின் மீது இருந்து இளைஞர் குதிப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த இளைஞரின் உடலை மீட்டனர்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம்












Click it and Unblock the Notifications