அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதி இளைஞர் உயிரிழப்பு.. காட்டாங்குளத்தூரில் பரபரப்பு
சென்னை: அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகரை சேர்ந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி இன்று காலை சென்னை வந்து கொண்டிருந்த போது காட்டாங்குளத்தூர் அருகே இன்று அதிகாலை இந்த விபத்து அரங்கேறியது. அமைச்சருக்கு சொந்தமான கார் மோதியதில் பைக்கில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். காரை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் ஜெகதீஸ்வரி அரசு காரில் வந்து கொண்டிருந்த நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றொரு காரில் வந்துள்ளனர். அப்போது காட்டாங்குளத்தூர் அருகே வந்த போது அமைச்சர் ஜெகதீஸ்வரியின் குடும்பத்தினர் வந்த கார் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இளைஞர் உயிரிழப்பு
தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த வாகனம் இன்று காலையில் விபத்தில் சிக்கியது. சென்னை காட்டாங்குளத்தூர் அருகே அமைச்சரின் கார் மோதியதில் இறையன்பு (வயது 26) என்ற இளைஞர் பலியாகியுள்ளார்.
ஹோண்டோ டியோ பைக்கில் இளைஞர் இறையன்பு வந்த நிலையில், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அமைசச்ர் ஜெகதீஸ்வரியின் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமைச்சருக்கு சொந்தமான வாகனம்
அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த ஊர் விருதுநகர் ஆகும். மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை கூட உள்ளதால், அதில் பங்கேற்க விருதுநகரில் இருந்து ஜெகதீஸ்வரி காரில் வந்துள்ளார். அரசு வாகனத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி வருகை தந்த நிலையில், அவருக்கு பின்னால் ஒரு எஸ்காட் வாகனம் வந்துள்ளது.
அதற்கு பின்னால் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த வாகனமான மாருதி எர்டிகா காரும் வந்துள்ளது. அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த வாகனம்தான், காட்டாங்குளத்தூர் அருகே பைக் மீது மோதியுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அமைச்சர் கார் மோதி இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
