சென்னையில் தார் சாலையில் போடப்பட்ட சிமெண்ட் பேட்சில் சறுக்கிய பைக்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
சென்னை: சென்னையில் தார் சாலையில் இருந்த பள்ளத்தை சரி செய்ய போடப்பட்ட சிமெண்ட் பேட்சில் இருசக்கர வாகனம் சறுக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் பல்வேறு சாலைகளில் பள்ளம் அதிகமாக காணப்படுகிறது.. சாலைகளில் உள்ள பள்ளம் காரணமாக விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலையில், அதனை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது..ஆனால் நடவடிக்கை என்பதோ ஆமை வேகத்தில் தான் எடுக்கப்படுவதாக புகார்கள் உள்ளது.

ஒரு சாலையில் பள்ளம் ஏற்பட்டால் அதில் யாராவது விபத்தில் சிக்கிய பிறகே நடவடிக்கை என்பது எடுக்கப்படுவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகளும் உள்ளது. இதனிடைய வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் புதிதாக போடப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் சாலைகள் போடப்படும் அதே நேரத்தில், சேதமடைந்த சாலைகள் பேட்ஜ் ஒர்க் செய்யப்படுகிறது.
சென்னை தங்கசாலை பெருமாள் கோயில் சந்திப்பில் சாலை பேட்ஜ் ஒர்க் செய்யும் பணி அண்மையில் நடந்துள்ளது. சாலைகளில் பேட்ச் ஒர்க்கிற்காக சிமெண்ட் பேட்ச் போடப்பட்டிருந்தது.. இந்நிலையில் இன்று காலை உத்தரகண்டைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் (27) இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தை சரி செய்ய அண்மையில் போடப்பட்ட சிமெண்ட பேச்சில் சறுக்கி விழுந்தார்.
இதனால் பின்னால் வந்த லாரியின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பிரவீன் உயிரிழந்தார். பிரவீன் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதால் விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம் சாலை பணிகள் முடிக்கப்பட்டிருந்தால் அவர் இறந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே சென்னை தங்கசாலை மேம்பாலம் அருகே, மாநகர பேருந்தின் பிரேக்கில் பழுது ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், பிற வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக, சாலை தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்தினார். நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications