நடுராத்தியில்.. "அதை" பைக்கில் வைத்துகொண்டு.. கூலாக ரவுண்டடித்த ஜோடி.. திறந்து பார்த்தால்..?

இளைஞரை வடமாநில தம்பதியினர் அடித்து கொன்றுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடுராத்திரி "அதை" பைக்கில் வைத்து கொண்டு, கூலாகபோய் கொண்டிருந்தனர் ஒரு ஜோடி.. அடுத்த செகண்டே போலீசார் சுற்றி வளைத்தனர்!

சம்பவத்தன்று, மீஞ்சூர் அடுத்த காட்டூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்... அப்போது அந்த வழியே ஒரு ஜோடி பைக்கில் சென்றது.. ஆண் பைக்கை ஓட்ட, பின்னாடி அந்த பெண் உட்கார்ந்திருந்தார்.

இவர்களுக்கு நடுவில் ஒரு சாக்கு மூட்டை இருந்தது.. அந்த சாக்கு மூட்டை, கனமாகவும், பெரிதாகவும் இருந்தது.. அதனால், போலீசாருக்கு சந்தேகம் வந்து, அவர்களை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அந்த மூட்டையை பிரித்து பார்த்தால், அது ஒரு பிணம்..!

உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசம்

காட்டூர் பகுதியில், திருக்குளம் என்ற இடத்தில்தான் இந்த ஜோடி தங்கி உள்ளது.. இவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள்.. டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகின்றனர்... இவர்களை போலவே அந்த பகுதியில் நிறைய டைல்ஸ் ஒட்டும் தொழிலாளிகள்தான்.. பலரும் வெளிமாநிலம்தான். பிடிபட்டவர்கள் தேவேந்திரசிங் 41, அவரது மனைவி சாயா 33, என்று தெரியவந்தது.. இந்த சாயாவுக்கு பிழைக்க வந்த இடத்தில் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது..

 கள்ளக்காதல்

கள்ளக்காதல்

வீட்டுக்கு பக்கத்தில் வசித்த மனோஜ் என்பவரைதான் விரும்பி உள்ளார்.. மனோஜ்-க்கு 30 வயதாகிறது.. தேவேந்திரசிங் எப்பவுமே வேலை விஷயமாக வெளியிடத்திற்கு சென்றுவிடுவாராம்.. அப்போது சாயா மட்டும்தான் தனியாக இருந்திருக்கிறார்.. உடனே கள்ளக்காதல் பற்றி கொண்டது. இருவரும் நிறைய இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்திருக்கிறார்கள்.. அப்போதெல்லாம் மனோஜ் வீடியோ, போட்டோவாக எடுத்து வைத்து கொண்டாராம்.

போட்டோக்கள்

போட்டோக்கள்

ஒருகட்டத்தில் சாயாவை தன்னுடன் வாழுமாறு வற்புறுத்தி உள்ளார்.. அதற்கு சாயா மறுக்கவும், ஏற்கனவே எடுத்து வைத்திருந்த ஆபாச, நிர்வாண போட்டோக்களை காட்டி மிரட்டி ஆரம்பித்துள்ளார்.. இதை பார்த்து பயந்துபோன சாயா, தன் கணவரிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதுள்ளார்.. இதை கேட்டுஅதிர்ந்து போன தேவேந்திரசிங், ஆத்திரமடைந்து, மனோஜை தீர்த்து கட்ட முடிவும் செய்தார். இதற்கு சாயாவே உதவியும் செய்தார்.

கைது

கைது

சம்பவத்தன்று, கணவனும், மனைவியும் மனோஜ் வீட்டிற்கு சென்று உருட்டுக்கட்டையால் அடித்து கொன்றனர்.. கையோடு ஒரு சாக்கு பையை இந்த தம்பதி எடுத்து போயிருந்தனர்.. அதில், சடலத்தை கட்டி பைக்கில், ஏற்றி நள்ளிரவில் காட்டூரில் இருந்து வாயலூர் நோக்கி சென்று கொண்டிருக்கும்போதுதான் போலீசாரிடம் சிக்கி கொண்டனர் போலீசார் தம்பதியை கைது செய்துள்ளனர்.. மனோஜ் உடல் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+