யூ டியூப் சேனல்கள் அத்துமீறுகின்றன! பேட்டி எடுப்பவர்களை ஏ1 ஆக்க வேண்டும்! பெலிக்ஸ் கேஸில் ஹைகோர்ட்
சென்னை; தனியார் யூ டியூப் சேனலின் ஜி பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவரின் முன் ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்கும் படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே குமரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் சவுக்கு சங்கர் யுடியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்தபோது, காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இதையடுத்து சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

புகார்: இந்த நிலையில் சவுக்கு சங்கரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் ஜெயிலில் பத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து அடித்துள்ளதாகவும் கோவை சிறையில் சவுக்கு சங்கரை சந்தித்த பின் அவரது வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கை உடைந்து விடக்கூடாது என பிளாஸ்டிக் பைப்பில் துணி சுற்றி அடித்துள்ளனர். ஆனாலும், அடி பலமாக விழுந்ததால் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வீக்கத்தை குறைப்பதற்காக ஆயின்மெண்ட் போட்டு, வலி நிவாரணி மாத்திரைகளை கொடுத்துள்ளனர். வலி நிவாரணி அதிகம் கொடுத்ததால் அவரது கிட்னி பாதிக்கப்பட உள்ளது.
சவுக்கு சங்கர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும் 10க்கும் மேற்பட்ட சிறை காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரது கண்களை கட்டிவிட்டு, குச்சியில் துணி சுற்றி காவலர்கள் அவரை தாக்கியதாக சவுக்கு சங்கர் என்னிடம் கூறினார்., என்று சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இன்னொரு வழக்கு: இந்நிலையில் தான் மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் புகாரில் சென்னை மாநகர குற்ற பிரிவில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் யுடியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்த பேட்டிதான் இந்த கைதுகளின் தொடக்கம் ஆகும். தனியார் யூ டியூப் சேனலில் ஜி பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவரிடம் சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில்தான் பெண் போலீசாரை தாக்கி பேசி இருந்தார்.
சவுக்கு சங்கரிடம் அளித்த பேட்டியைத் தொடர்ந்து, பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே குமரேஷ் பாபு ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளார்.
யூடியூப் சேனல்கள் பத்திரிக்கை துறையின் தொல்லையாக மாறிவிட்டதாகவும், அவற்றின் செயல்பாடுகளை அரசு கட்டுப்படுத்தத் தொடங்க வேண்டிய நேரம் இது என்றும் நீதிபதி கூறியுள்ளார். நேர்காணல் செய்பவர்கள்தான் இழிவான மற்றும் ஆட்சேபனைக்குரிய பேச்சுக்களை பேசுவதற்கு அனுமதிக்கிறார்கள். இதனால் நேர்காணல் செய்பவர்கள் ஏ1 ஆக வழக்குகளில் அறிவிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி வழக்கில் குறிப்பிட்டு உள்ளார்.
யூடியூப் சேனல்களில் மோசமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் நேர்காணல் செய்பவர்கள் ஏ1 ஆக வழக்குகளில் அறிவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. தனியார் யூ டியூப் சேனலின் ஜி பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவரின் இந்த முன் ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்கும் படியும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே குமரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications