கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திடீர் மாரடைப்பு.. மருத்துவமனையில் அவசரமாக அனுமதி
சென்னை: தவெக தலைவர் விஜய் கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி நடந்த பரப்புரையில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து வதந்தி பரப்பியவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள் . அந்த வகையில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலை கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்பு உடல் பரிசோதனை செய்ய சென்ற போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கிளம்பி சென்ற போது திடீரென கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேநேரம் நடத்த ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. அந்த ஆணையமும் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

இதற்கிடையில், கரூர் நெரிசல் தொடர்பாகப் பல்வேறு வதந்திகளும், அவதூறுகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.கரூர் நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் திமுகவின் சதி உள்ளதாகவும்,செந்தில் பாலாஜிதான் அதற்கு காரணம் என்றும் சோஷியல் மீடியாவில் தவெகவினர் குற்றம்சாட்டி தகவல்களை பரப்பி வந்தார்கள்
இது தொடர்பாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், கரூர் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டு எனக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளைப் பதிவு செய்த 3 பேரை நேற்று போலீசார் கைது செய்திருந்தனர். அதில் இரண்டு பேர் தவெகச் சேர்ந்தவர்கள் ஆவார். ஒருவர் பாஜகவைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கைது நடவடிக்கையின் தொடர்ச்சியாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலை தனியார் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு முன்பு மருத்துவமனைக்கு உடற் பரிசோதனைக்கு சென்றபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரைக் காண அவரது குடும்பத்தார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். பெலிக்ஸ்க்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாரடைப்பால் பெலிக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications