ஆபரேஷன் தியேட்டர் உள்ளே.. குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய யூட்யூபர் இர்பான்.. மீண்டும் சர்ச்சை
சென்னை: தனது மனைவியின் கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தை அறிவித்து கடும் சர்ச்சையில் சிக்கினார் பிரபல யூட்யூபரான இர்ஃபான். விவகாரம் பெரிதாக, மன்னிப்பு கேட்டதை அடுத்து அவர் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ஆப்ரேஷன் தியேட்டருக்குள் சென்று தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபில் வெளியிட்டு இருக்கும் நிலையில் அது சட்டப்படி தவறு என்கின்றனர் சில மருத்துவர்கள்.
தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் தெரிந்து கொண்டதோடு அதனை வீடியோவாகவும் வெளியிட்டார் பிரபல யூட்யூபரான இர்ஃபான். அவரது 'இர்பான்ஸ் வியூ' யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியான நிலையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர்.

அதே நேரத்தில் இதுபோன்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை பொதுவெளியில் வெளியிடுவது தவறு என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கும் இர்பானுக்கும் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கருவின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றம் எனவும், விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை எச்சரித்தது.
கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள், ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என தமிழக அரசு விடுத்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே யூட்யூப் நிறுவனத்தின் அறிவுறுத்தலால் இர்பான் அந்த வீடியோவை தனது 'இர்பான்ஸ் வியூ' யூட்யூப் சேனலில் இருந்து நீக்கிவிட்டார்.
இந்த நிலையில் இர்பான் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கிடையே யூடியூபர் இர்பான் மீதான புகார் குறித்து பொது சுகாதாரத்துறை சார்பில் விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த மருத்துவ குழுவிடம் வாட்ஸ்ஆப் மற்றும் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இர்பான் மன்னிப்பு கேட்டதால், அவர் மீதான நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் இர்பான்.
தற்போது இர்பாஃன்ஸ் வியூ யூடியூப் சேனலில் நேற்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் இர்பாஃன். அதில் தனது மனைவி வீட்டில் இருந்தது முதல் அவர் குழந்தை பெற்று எடுத்தது வரையிலான காட்சிகள் அதில் இருந்தது.
குறிப்பாக கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி அவரது மனைவிக்கு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மனைவி பிரசவ வலியால் துடிக்கும் காட்சி குழந்தை பிறந்தவுடன் அதை கையில் ஏந்துவது, தொப்புள் கொடியை வெட்டுவது உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.
தற்போது வரை அந்த வீடியோவை சுமார் 15 லட்சம் பேர் பார்த்திருக்கும் நிலையில் ஏராளமானோர் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இதில் தான் ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. பொதுவாக பிரசவ அறையில் கணவன் அனுமதிக்கப்பட மருத்துவச் சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால் அறுவை சிகிச்சை போன்ற சிக்கலான மருத்துவ முறைகளின் போது பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அறையில் இருக்க வேண்டும். முறையான அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே கத்தரிக்கோல் உள்ளிட்டவற்றை உபயோகிக்க வேண்டும் என விதிமுறைகள் இருக்கிறது.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை அறைக்குள் வீடியோ எடுத்து அதனை youtube-ல் பதிவிட்டதற்கும், தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியதற்கும் மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு அது தவறான முன்னுதாரணம் என விமர்சித்துள்ளனர்.
இதற்கிடையே இர்பாஃனுக்கு ஆதரவும் குவிந்து வருகிறது. தொடர்ந்து அவரது வீடியோவில் ஏராளமானோர் தாய்மையின் பெருமை குறித்து பேசி வருகின்றனர். அதே நேரத்தில் குழந்தை பிறந்ததும் குழந்தையின் வயிற்றிலிருந்து சிறிது இடைவெளி விட்டு தொப்புள் கொடியில் கிளிப் மாட்டப்படும். அதற்குப் பிறகு அதனை வெட்டுவதால் எந்த சர்ச்சையும் இல்லை என்றும் சில மருத்துவர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ மீண்டும் மீண்டும் சர்ச்சை வளையத்தில் சிக்கி வருகிறார் இர்பான்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications