கே.டி.ராகவன் தொடர்பாக வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து அதிரடி நீக்கம்!
சென்னை: கே.டி.ராகவன் தொடர்பாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோவை தனது யூடியூப் தளத்தில் வெளியிட்ட பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் பாஜக கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அந்த கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.
Recommended Video
பாஜக தமிழக பொதுச் செயலாளராக பதவி வகித்த கே.டி.ராகவன், பெண் ஒருவருடன் செல்போனில் வீடியோ செக்ஸ் சாட் பேசியதாக ஒரு வீடியோ மதன் நடத்தி வந்த மதன் டைரி என்ற யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
பெண் ஒருவருடன் ஆபாசமாக பேசிக்கொண்டு சுய இன்பம் செய்வது போல் அந்த வீடியோ காட்சிகள் அமைந்திருந்தன. இந்த செயல்களில் ஈடுபடுவது கே.டி.ராகவன் என்று மதன் ரவிச்சந்திரன் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து ராகவன் தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

பாஜக அறிக்கை
இந்த நிலையில், இதுதொடர்பாக கரு. நாகராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்திரிக்கையாளர் திரு மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு. K. அண்ணாமலை IPS அவர்களை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

மதன் ரவிச்சந்திரன் நீக்கம்
அதே வேளையில் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துக்கள் தெரிவித்துள்ள திரு. மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்கள். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு, கரு. நாகராஜன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேபி நட்டா முன்னிலையில் கட்சியில் சேர்ந்தவர்
திமுகவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்து வந்தவர் மதன் ரவிச்சந்திரன். இதன்பிறகு மீடியா நிறுவனத்தில் இருந்து வெளியேறி பாஜகவில் சேர்ந்தார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் மதன் ரவிச்சந்திரன் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அந்த அளவிற்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது .

உட்கட்சி விவகாரங்கள்
இந்த நிலையில்தான் ராகவன் தொடர்பாக இவர் வீடியோ வெளியிட்டது பாஜகவிற்கு இருக்கக்கூடிய சில நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கட்சி எடுக்கவேண்டி நடவடிக்கையை பொதுவெளியில் ஒரு கட்சி பிரமுகர் எப்படி வெளியிடலாம் என்ற கேள்விகள் தலைமையை நோக்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இந்த நிலையில்தான் மதன் ரவிச்சந்திரன் பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications