3 நாளில் என் தலைவனை ரிலீஸ் செய்யலைனா...ஸ்டிரைக் பண்ணுவோம்- டிடிஎப் வாசன் நண்பர் பகிரங்க மிரட்டல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டவிரோதமாக பைக் சாகசங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் டிடிஎப் வாசனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என அவரது நண்பர் ஒருவர் வீடியோ மூலமாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பைக் சாகசங்களை வீடியோவாக யூடியில் பதிவிட்டு பிரபலமான நபர் டிடிஎப் வாசன. Twin Throttlers யூடியூப் மூலம் ஏராளமான ரசிகர்களை உருவாக்கிக் கொண்ட டிடிஎப் வாசன் ஒரு 'தலைவன்' ரேஞ்சுக்கு 2கே கிட்ஸ்களால் கொண்டாடப்படுகிற பேரவலம் தொடருகிறது.

Youtuber TTF Vasan friend release threaten video to Police

டிடிஎப் வாசனின் செயல்பாடுகள் அப்பட்டமான சட்டவிரோத, சமூகவிரோதமானது. ஆனாலும் அவரது லைசென்ஸ் உள்ளிட்டவை முடக்கப்படாமல்தான் இருக்கிறது.

கடந்த ஆண்டு முதல் சர்ச்சைகளின் நாயகனகத்தான் இருந்து வருகிறார் டிடிஎப் வாசன். அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்தால் போலீசாரை மிரட்டி வீடியோ போடுவதையும் ஒரு வாடிக்கையாக வைத்திருக்கிறார் டிடிஎப் வாசன்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து மகாராஷ்டிராவுக்கு இருசக்கர வாகனத்தில் டிடிஎப் வாசன் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீலிங் எனப்படும் பைக் சாகம் செய்ய முயன்ற போது பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். ஆள் ஒரு பக்கம்.. வண்டி ஒரு பக்கம் என்கிற கதையாக கிடந்த டிடிஎப் வாசன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது கை எலும்பு முறிவடைந்திருந்தது.

இருப்பினும் டிடிஎப் வாசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலும் நள்ளிரவில் எனக்கு இடுப்பு வலிக்கிறது; முதுகு வலிக்கிறது என போலீசாரை அலைகழிக்க வைத்து கொண்டிருக்கிறார் வாசன். இந்நிலையில் டிடிஎப் வாசனின் ஜாமீன் மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.

இதனிடையே டிடிஎப் வாசனின் நண்பர் ஒருவர் இன்ஸ்டாவில் (https://www.youtube.com/shorts/k-SUv9Au__s) வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், டிடிஎப் வாசனை 3 நாட்களில் விடுதலை செய்யாவிட்டால் தமிழ்நாடு ஸ்தம்பிக்கும் என எச்சரித்துள்ளார். அந்த வீடியோவில், ஓப்பனாக ஒன்னு சொல்லிக்கிறேன்.. இன்னும் 3 நாள் அல்லது 1 வாரத்தில் அவர் வெளியே வரலைன்னா நாங்க அவங்க பிரண்ட் சார்பாக ஸ்டிரைக் பண்ணலாம்னு இருக்கோம். அவன் ஜெயிலில் இருக்கான்னு நினைச்சு கூட பார்க்க முடியலை. அவன் யாரையாவது என் வீடியோவை பாருங்கன்னு சொல்றானா? அல்லது இந்த மாதிரி பைக் வாங்குகன்னு சொல்றானா? அவன் எதாவது தப்பானது பண்ணினானா? அவன் என்ன தீவிரவாதியா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும் டிடிஎப் வாசன் ஜெயிலுக்குப் போக காரணமே மீடியாதான்.. ஒரு பையனை டிராக் பண்ணி பிடிக்கனுமா? அவன் கொலை பண்ணிட்டானா? எனவும் அதில் டிடிஎப் வாசனின் நண்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+